
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 1 மணி நேரமாக செயல்படாமல் இருந்த வாட்ஸ் அப் பயன்பாடு மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது.
வாட்ஸ் அப் பயன்பாட்டை உலக மக்கள் அனைவரும் உபயோகித்து வருகின்றனர். வாட்ஸ் அப் மூலம் தகவல்களை பரிமாறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று மதியம் 1.45 மணியளவில் உலகம் முழுவதிலும் வாட்ஸ் அப் சேவை முடங்கியது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ் பயன்பாடு முடங்கியதாக கூறப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வாட்ஸ் அப் செயல்பாடு முடங்கியது. இதனால், வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்கள் அதிர்ச்சிஅடைந்தனர்.
வாட்ஸ் அப் செயல்படாதது குறித்து பயனாளர்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில், சுமார் 1 மணி நேரத்துக்குப் பிறகு, வாட்ஸ் அப் பயன்பாடு மீண்டும் இயங்க தொடங்கியது. தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதை அடுத்து மீண்டும் வாட்ஸ் அப் சேவை தொடங்கியதாக கூறப்படுகிறது.