
வட மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் கன மழையும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழக உள் மாவட்டங்களில் கன மழையும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. தொடர் மழை காரணமாக புதுச்சேரி பொதுப்பணி துறை மற்றும் வருவாய் துறையைச் சேர்ந்த குழுக்கள் தொடர் கண்காணிப்பில், ஈடுபட்டு மழைநீர் தேங்காதவாரு பார்த்து வருகின்றனர். ஆனாலும், கழிவுநீர் வாய்க்கால்களை சரியான முறையில் சுத்தம் செய்யப்டவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
முதலாமைச்சர் நாராயணசாமி தலைமையில், அமைச்சர்கள், நமச்சிவாயம், கமலக்கண்ணன், ஷாஜகான் மற்றும் அதிகாரிகள், மழைநீர் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தினர். பூமியான்பேட், காமராஜர் நகர், பிள்ளைத்தோட்டம், கிருஷ்ணாநகர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது, முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களே கால்வாயை சுத்தம் செய்தனர். இந்த நிலையில், மழை பாதிப்பு குறித்தும், வெள்ள பாதிப்புகளை தடுப்பது உள்ளிட்டவை குறித்தும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.