அடுத்த வாரம் முதல் வாட்ஸ் அப் இயங்காது…! வாடிக்கையாளர்கள் ஷாக்

By manimegalai a  |  First Published Oct 23, 2021, 7:20 PM IST

நவம்பர் 1ம் தேதி முதல் பழைய ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் செயல்படாது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.


நவம்பர் 1ம் தேதி முதல் பழைய ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் செயல்படாது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் வசிக்கும் மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வாட்ஸ் அப்பை பேஸ்புக் நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது.

இந் நிலையில் வரும் 1ம் தேதி முதல் வாட்ஸ் அப்பானது பழைய ஸ்மார்ட் போன்களில் இயங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆன்ட்ராய்டு OS, 4.1, ஐஓஎஸ் 10 மற்றும் அதற்கு மேலான ஸ்மார்ட் போன்களில் மட்டுமே வாட்ஸ் அப் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போதுள்ள அப்டேட்டு லேட்டஸ்ட் வெர்ஷன் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் இயங்கும் என்று கூறப்பட்டு உள்ளது. வாட்ஸ் அப் பற்றிய இந்த சமீபத்திய தகவலை அறிந்த வாடிக்கையாளர்கள் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

click me!