கேரளாவில் ஆன்லைன் மூலமாக ஐபோன் ஆர்டர் செய்த நபருக்கு பார்சலில் சோப்பு கட்டி அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் ஆன்லைன் மூலமாக ஐபோன் ஆர்டர் செய்த நபருக்கு பார்சலில் சோப்பு கட்டி அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இப்போது எது என்றாலும் உடனடியாக ஆன்லைனில் ஆர்டர் செய்வது பேஷனாகி விட்டது. ஒரு துண்டு வேண்டும் என்றாலும் சரி, ஒரு ஹெட் போன் வேணும் என்றாலும் சரி…. உடனே ஆன்லைன் ஆர்டர் தான்.
அப்படித்தான் கேரளாவில் ஒருவர் ஐ போனை ஆன்லைனில் ஆர்டர் பண்ண அவருக்கு பார்சலில் சோப்புக் கட்டி வந்திருக்கிறது. எர்ணாகுளம் அலுவா பகுதியை சேர்ந்த நூருல் அமீன் என்பவர் சில நாட்களுக்கு முன்பு 70 மதிப்புள்ள ஐ போனை பிரபல ஆன் லைன் வர்த்தக வலைதளத்தில் ஆர்டர் செய்துள்ளார்.
அடுத்த சில நாட்களில் ஆன்லைன் வழியாக பார்சல் ஒன்று அவருக்கு வந்தது. ஆசையாய் பிரித்து பார்த்தவருக்கு செம ஷாக். உள்ளே ஐ போனுக்கு பதிலாக ஒரு சோப்புக்கட்டியும் அதோடு 5 ரூபாயும் இருந்திருக்கிறது.
செம ஷாக் ஆன அமீன் நேராக போலீஸ் ஸ்டேஷனில் போய் புகார் அளித்திருக்கிறார். சைபர் கிரைம் தரப்பு விசாரித்து கொண்டு இருக்கும் அதே வேளையில் இவருக்கு வர வேண்டிய ஐபோன் பார்சல் மாறிவிட்டதாக சம்பந்தப்பட்ட வலைதளம் தெரிவித்து உள்ளது.
கடைசியில் அமீனுக்கு பணம் திருப்பி தரப்பட்டாலும் ஆன்லைன் பொருட்கள் ஆர்டர் செய்யும் போது கவனம் தேவை என்று எச்சரிக்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்…!