Modi : பிரதமர் மோடியின் சிறுவயது முஸ்லீம் நண்பர்.. யார் இந்த அப்பாஸ் ? வெளியான தகவல் !

By Raghupati RFirst Published Jun 22, 2022, 5:38 PM IST
Highlights

Modi Friend Abbas : அப்பாஸை தனது தாய், மற்ற பிள்ளைகளைபோல் மிகுந்த அக்கறையுடன் வளர்த்தார் எனவும், அவருக்கு ஈத் பண்டிகையின் போது, பிடித்த உணவுகளை செய்து கொடுப்பார் எனவும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடி தனது தாயின் நூறாவது பிறந்ததினத்தை முன்னிட்டு, வலைப்பதிவுஒன்றில் தனது குழந்தை பருவ நினைவுகளை பகிர்ந்தார். அதில் குஜராத்தின் வத்நகரில் மண்ணால் கட்டப்பட்டசிறிய ஓட்டு வீட்டில் மிக ஏழ்மையான நிலையில் வாழ்ந்ததாக தெரிவித்திருந்தார். அந்த சூழ்நிலையிலும், அருகில் உள்ள கிராமத்தில் வசித்த தனது தந்தையின் நண்பர்அகால மரணம் அடைந்தபோது, அவரது மகன் அப்பாஸ் என்பவரை தனது வீட்டுக்கு அழைத்து வந்துபடிக்க வைத்தார் என குறிப்பிட்டிருந்தார். 

அப்பாஸை தனது தாய், மற்ற பிள்ளைகளைபோல் மிகுந்த அக்கறையுடன் வளர்த்தார் எனவும், அவருக்கு ஈத் பண்டிகையின் போது, பிடித்த உணவுகளை செய்து கொடுப்பார் எனவும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அப்போதிருந்தே யார் அந்த அப்பாஸ் என்பதை அறிய இணையவாசிகள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர். இணையத்தில் தேடி கண்டுபிடிக்கப்பட்ட அப்பாஸின் போட்டோவை, பிரதமர் மோடியின் சகோதரர் அடையாளம் காட்டினார். அப்பாஸ் பாய் என அழைக்கப்பட்டார்.

இதையும் படிங்க : Thalapathy Vijay : எங்களின் ஒற்றை தலைமையே.! அதிமுகவுக்கு டஃப் கொடுக்கும் நடிகர் விஜய் ரசிகர்கள்.!

அவர் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளதாகவும், பிரதமர் மோடியின் சகோதாரர் கூறினார். குஜராத் அரசின் உணவு மற்றும்பொது விநியோக துறையில் இரண்டாம் நிலை ஊழியராக பணியாற்றிய அப்பாஸ் சில மாதங்களுக்கு முன்புதான் ஓய்வுபெற்றுள்ளார். அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் வசிக்கிறார். 

இளைய மகன் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் வசிக்கிறார். அவருடன் அப்பாஸ் தற்போது வசித்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை வெளியிட்டவர் குஜராத்தை சேர்ந்த பத்திரிகையாளர் தீபல் திரிவேதி என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். பிரதமர் மோடியின் சிறுவயது நண்பர் அப்பாஸ் பற்றிய தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க : EPS Vs OPS : 23 தீர்மானம் ஓகே.. ஒற்றை தலைமைக்கு வாய்ப்பில்ல ராஜா! இபிஎஸ் - ஓபிஎஸ் காரசார விவாதம் !

click me!