மூன்று பட்ட மேற்படிப்புகளை அறிமுகம் செய்ய சென்னை ஐஐடி திட்டம்

By Kevin KaarkiFirst Published Jun 22, 2022, 4:56 PM IST
Highlights

புதிய எம்.ஏ. படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகள் 2023 மார்ச், ஏப்ரல் மாத வாக்கில் துவங்க இருக்கிறது. 

மேம்பாட்டு கல்வி, ஆங்கிலம் மற்றும் பொருளாதாரம் என மூன்று பிரிவுகளில் எம்.ஏ. எனப்படும் பட்ட மேற்படிப்பை 2023-24 கல்வி ஆண்டு முதல் அறிமுகம் செய்ய சென்னை ஐஐடி திட்டம் தீட்டி உள்ளது. இது இரண்டு ஆண்டுகள் பயிலும் படிப்பு ஆகும். 

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை சார்பில் புதிய எம்.ஏ. பட்ட படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. மேம்பாட்டு கல்வி, ஆங்கிலம் உள்ளிட்டவை தற்போது ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த எம்.ஏ. படிப்புகளாக இருந்து வருகின்றன. இதற்கு பதிலாக பொருளாதாரம் பிரிவை சேர்ந்து மூன்று படிப்புகளையும் இரண்டு ஆண்டுகள் எம்.ஏ. படிப்புக்கான பாடப் பிரிவுகளாக அறிமுகம் செய்யப்பட உள்ளன. இவை 2023-24 கல்வி ஆண்டு முதல் செயல்பாட்டு வர உள்ளன.

விண்ணப்பிக்கும் நடைமுறை:

ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 25 இடங்கள் இந்திய மாணவர்களுக்காக ஒதுக்கப்படுகிறது. மிகை இடங்கள் அடிப்படையில் சர்வதேச மாணவர்களும் இந்த படிப்பில் சேர அனுமதிக்கப்பட உள்ளனர். புதிய எம்.ஏ. படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகள் 2023 மார்ச், ஏப்ரல் மாத வாக்கில் துவங்க இருக்கிறது. ஜூலை 2023 முதல் வகுப்புகள் துவங்க உள்ளன. புதிய எம்.ஏ. படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நுழைவு தேர்வு அடிப்படையில் நடைபெற இருக்கிறது.

தனித்துவ அம்சங்கள்:

கொள்கை பகுப்பு ஆய்வுகள், சமூக பொருளாதார மேம்பாட்டை வடிவமைப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கு, தரவு அறிவியல் மற்றும் நிர்வாகம், பருவ நிலை மாற்றம், நிலைத் தன்மை, நகர மயமாக்கல் என தற்கால பிரச்சினைகளில் ஈடுபடுத்துதல் உள்பட பல்வேறு தனித்துவ அம்சங்கள் புதிய பாடத்திட்டத்தில் இடம்பெறுகின்றன.

புத்தாக்க பொருளாதாரம், நகர்ப்புற திட்டமிடல் மேம்பாடு, சுகாதார கொள்கை, சுற்றுச் சூழல் மானுடவியல், பருவநிலை பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை, கணக்கீட்டு மொழியியல் என தற்கால தேவைகளை பூர்த்தி செய்யும் பாடங்களை உள்ளடக்கியதாக எம்.ஏ. படிப்பின் பாடப் பரிவுகள் சீரமைக்கப்பட உள்ளன. 

click me!