மேகதாது அணை விவகாரம்.. சுற்றுச்சூழல் அனுமதி விண்ணப்பம் பரிசீலனையில் இருந்து நீக்கம்..

By Thanalakshmi VFirst Published Jun 22, 2022, 4:47 PM IST
Highlights

மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதி விண்ணப்பம் பரிசீலனையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
 

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9 கோடியில் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் மேகதாது எனும் இடத்தில் புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக அரசு ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனை எதிர்ப்பு தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேகதாது எனும் இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டினால், தமிழக டெல்டா பகுதிகள் பாலை வனமாகும் மாறும் அபாயம் உள்ளது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதி விண்ணப்பம் பரிசீலனையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் விண்ணப்பத்தை பரிசீலனையில் இருந்து மத்திய சுற்றுச்சூழல் துறை நீக்கியுள்ளது. நீர்வளத்துறை அமைச்சகமே அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை முடிவு செய்யும் என்று நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் முடிவு செய்தால் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: maharashtra news: shiv sena: மகாராஷ்டிராவில் உச்சத்தில் அரசியல் குழப்பம்! முரண்படும் சிவசேனா, காங்கிரஸ்

click me!