டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி பயணித்த கார் நேற்று விபத்துக்குள்ளானதற்கு காரணம் குறித்து போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி பயணித்த கார் நேற்று விபத்துக்குள்ளானதற்கு காரணம் குறித்து போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி நேற்று தனது காரில் அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு திரும்பினார். அப்போது, கார் பல்கார் மாவட்டத்தில் சாலை நடுவே இருந்த தடுப்பு மீது மோதி விபத்துள்ளானது.
இதில் சம்பவவ இடத்திலேயே சைரஸ் மிஸ்திரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றொரு நபரும் உயிரிவந்தார். கார் ஓட்டுநரும், மற்றொருநபரும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ட்விட்டரில் மட்டும் தான் காங்கிரஸ் கட்சி இருக்கு.. களத்தில் காணோம் - கலாய்த்த குலாம்நபி ஆசாத்
இந்நிலையில் சைரஸ் மிஸ்திரி கார் விபத்துக்குள்ளானதற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி முதல்கட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் “ சைரஸ் மிஸ்திரி பயணித்த கார் அளவு கடந்தவேகக்தில் சென்றுள்ளது. அதாவது 20 கி.மீ தொலைவை வெறும் 9 நிமிடங்களில் கடந்துள்ளது.
பால்கர் மாவட்டத்தில் உள்ள சாரோட்டி சோதனைச்சாவடியைக் கடந்த சிறிது நேரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் காரில் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியவில்லை. காரை மருத்துவர் அனஹிதா பான்டோல் ஓட்டியுள்ளார்.
இந்த விபத்தில் பான்டோலும் அவரின் கணவரும் படுகாயமடைந்துள்ளனர். அளவுக்கு அதிகமான வேகம், தவறான கணிப்பில் காரைச் செலுத்தியது விபத்துக்கான முக்கியக் காரணங்களாகும். உயிரிழந்த இருவருமே சீட் பெல்ட் அணியவில்லை.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கார் விபத்து... சம்பவ இடத்திலேயே சைரஸ் மிஸ்திரி உயிரிழப்பு!!
சாரோட்டி சோதனைச் சாவடியில் இருந்த கேமிராவை ஆய்வுசெய்தபோது, கார் பிற்பகல் 2.21 மணிக்கு கடந்துள்ளது, இந்த இடத்திலிருந்து 20கி.மீ தொலைவில் விபத்து நடந்துள்ளது.அதாவது அடுத்த 9நிமிடங்களில் சூர்யா ஆற்று பாலத்தில் விபத்து நடந்துள்ளது.
காரின் பின்பகுதியில்தான் மஸ்திரியும், ஜஹாங்கிர் பான்டோலும் அமர்ந்திருந்தார். டாரியாஸ் என்பவர் முன் சீட்டிலும், காரை அனாஹிதா ஓட்டியுள்ளார்.
விபத்து நடந்ததை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில் “ காரை ஒரு பெண் ஓட்டி வந்தார். கார் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதியது” எனத் தெரிவித்தனர்.
இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.