Gujarat Election Result 2022: முன்பேசொன்னது ஏசியாநெட்! குஜராத்தில் பாஜகவின் வெற்றிக்கு காரணம் என்ன?

By Pothy RajFirst Published Dec 8, 2022, 4:21 PM IST
Highlights

குஜராத்தில் நடந்த சட்டசபைச் சேர்தலில் பாஜக வரலாற்று வெற்றியுடன் 7வதுமுறையாக ஆட்சி அமைக்கும் என்றும், அதற்குரிய காரணத்தையும் ஏசியாநெட் நியூஸ் தேர்தலுக்கு முன்பே கணித்து வெளியிட்டிருந்தது.

குஜராத்தில் நடந்த சட்டசபைச் சேர்தலில் பாஜக வரலாற்று வெற்றியுடன் 7வதுமுறையாக ஆட்சி அமைக்கும் என்றும், அதற்குரிய காரணத்தையும் ஏசியாநெட் நியூஸ் தேர்தலுக்கு முன்பே கணித்து வெளியிட்டிருந்தது.

குஜராத்தில் நடந்த சட்டசபைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, பாஜக இதுவரை 71 தொகுதிகளில் வென்று 87 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் பாஜக 155 தொகுதிகளுக்கும் மேல் வென்று வரலாற்று வெற்றியுடன் ஆட்சியைத் தக்கவைக்கும் என்பது உறுதியாகிறது.

குஜராத்தில் 12ம்தேதி பதவி ஏற்புவிழா! முதல்வராக தொடர்கிறார் பூபேந்திர படேல்

காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளில் வென்றுள்ளது, 10 தொகுதிகளில் மட்டும் முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 2தொகுதிகளில் வெற்றி பெற்று 2 தொகுதிகளில் முன்னிலையி்ல் உள்ளது.

குஜராத் தேர்தலில் பாஜக வரலாற்று வெற்றி பெறும் என்று ஏசியாநெட் சேனல் தேர்தலுக்கு முன்பே அறிவியல் ரீதியான சர்வே செய்து அறிவித்தது. ஏசியாநெட் சேனல், சி-போர்ஸ் இணைந்து தேர்தலுக்கு முன்பாக கருத்துக்கணிப்பு நடத்தின. இதில் ஒரு லட்சத்து 82ஆயிரத்து557 வாக்களர்களிடம் கேள்விப்பட்டியல் தயாரித்து, அறிவியல் ரீதியாக கருத்துக்கணிப்புகளை நடத்தி, அதன் ஆய்வு முடிவுகளை தேர்லுக்கு முன்பு வெளியிட்டபட்டது.

அதில், தற்போதுள்ள சூழலில் மக்களின் எண்ணத்தின் அடிப்படையில் குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட்டால், பாஜக மிகப்பெரியவெற்றியை பெறும். அதாவது, 133 இடங்கள் முதல் 143 இடங்களைக் கைப்பற்றும் என்று ஏசியாநெட் நியூஸ் தெரிவித்திருந்தது.

காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் 31 இடங்களைப் பிடிக்கும் என ஏசியாநெட் தெரிவித்திருந்தது. கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் கிடைத்த இடங்களை விட காங்கிரஸ் கட்சிக்கு இடங்கள் பாதியாகக் குறையும் என்றும், காங்கிரஸின் வாக்கு வங்கியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றும், காங்கிரஸ் கட்சிக்கு 10 சதவீதம் அளவு வாக்குவங்கி குறையும் என ஏசியாநெட் நியூஸ் தெரிவித்திருந்தது

ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் 10 சதவீதம் வரை வாக்குசதவீதத்தை கைப்பற்றும், 5 முதல் 14 இடங்களை கைப்பற்றும் என ஏசியாநெட் நியூஸ் தெரிவித்திருந்தது. அதேபோல தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சி 4 இடங்களில்தான் முன்னிலையில் இருக்கிறது

குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக.. காங்கிரஸ் & ஆம் ஆத்மி நிலை ? ஏசியாநெட் நியூஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள் !

இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு ஒரு சதவீதம் வாக்கு சதவீதம் குறையும், ஆம் ஆத்மிக்கு 16 சதவீதம் வாக்கு வங்கி அதிகரிக்கும் எனத் தெரிவித்திருந்தது.

பாஜக மீண்டும் குஜராத்தில் ஆட்சி அமைப்பதற்கான காரணம், பாஜக ஆட்சியை மக்கள் விரும்ப காரணம் குறித்து ஆய்வில் முடிவுகளை ஏசியாநெட் நியூஸ் வெளியிட்டிருந்தது. அதில், “ பிரதமர் மோடியின் இமேஜ், குஜராத் மாநிலத்தின் மேம்பாடு, வளர்சிக்காக பாஜக அ ரசும், பிரதமர் மோடியும் செய்துவரும் திட்டங்கள், பணிகளால் பாஜகவுக்கு வாக்களிப்போம் என 34 சதவீதம் பேர் தெரிவித்திருந்தனர். குஜராத்தில் பாஜக ஆட்சியின் செயல்பாடுகளை நன்றாக இருக்கு  என்றும் சிறப்பானதாக இருக்கும் என்றும் மக்கள் தெரிவித்திருந்தனர்.

தேர்தலுக்கு ஓர் ஆண்டுக்கு முன்பு முதல்வராகிய பூபேந்திர படேலின் செயல்பாடு, நிர்வாகம் திருப்தி அளிப்பதாக மக்கள் தெரிவித்தனர். 34 சதவீதம் பேர் பூபேந்திரபடேல் 2வது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட  ஆதரவு தெரிவி்த்துள்ளனர்.

புதிய வரலாறு! குஜராத்தில் பாஜக 7-வது முறையாக ஆட்சி அமைக்கிறது

சர்வேயில் பங்கேற்ற மக்களில் பெரும்பாலோனோர் இரு கோரிக்கைகளையே எழுப்பினர். வேலையின்மை நீக்குதல், அத்தியாவசியப் பொருட்கள் விலையைக் குறைத்தல் ஆகிய கோரிக்கைகளை முக்கியமாகக் கூறியுள்ளனர். இது தவிர  கடனுக்கான வட்டியைக் குறைத்தல், 300 யூனிட்வரை இலவசமின்சாரம், கல்வி தரத்தை மேம்படுத்துதல், வேளாண்மைக்கு குறைந்தபட்சம் 12 மணிநேர மின்சாரம் ஆகியவற்றை வலியுறுத்தினர். இந்த கோரிக்கைகளை வரும் ஆட்சியில் பாஜக நிறைவேற்றும் என்று நம்பியதால் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்து மீண்டும் ஆட்சியில் அமரவைத்துள்ளனர்.

இதுதவிர வேட்பாளர்கள்தேர்வில் 43சதவீதம் ஏற்கென எம்எல்ஏக்களாக இருந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. பாஜகவின் மாநிலத் தலைவராக சிஆர் பாட்டீல் பதவிக்கு வந்தபின் அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்தார். காங்கிரஸ் கூடாரத்தில் இருந்து எம்எல்ஏக்களை இழுக்கும் ஆப்ரேஷன் லோட்டஸ் பணியை விரைவுப்படுத்தினார். 

ஆம் ஆத்மி கட்சியின் திடீர் பிரவேசம், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலர் பாஜகவில் சேர்ந்தது, போன்றவை எதிர்க்கட்சித் த ரப்பில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட பாஜக, எந்தெந்தத் தொகுதியில் பாஜக பலவீனமாக இருக்கிறது, அங்கு பிரதமர் மோடியின் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தலாம் எனத் திட்டமிட்டது.

அதன்படியே மோடியின் பிரச்சாரப் பயணம் வகுக்கப்பட்டது. கடந்த முறை தேர்தலில் பாஜகவுக்கான வாக்கு சதவீதம் 4 சதவீதம் வரை குறைந்திருந்தது, இந்த முறை 53 சதவீதமாக உயர்ந்ததற்கு இந்த வியூகம் காரணமாகும்.


 

click me!