
குஜராத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெறும், 7-வது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு முன்பே ஏசியாநெட் நியூஸ் அறிவியல் பூர்வமாக கருத்துக் கணிப்பு நடத்தி தெரிவித்திருந்தது.
அது மட்டுமல்லாமல் இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி விஸ்வரூமெடுக்கம், காங்கிரஸ் கட்சிக்கு வாக்குவங்கி சதவீதம் கடுமையாக பாதிக்கும் என்று ஏடியாநெட் நியூஸ் தெரிவித்திருந்தது. அதுபோல் நடந்துள்ளது.
குஜராத் தேர்தல் முடிவு : பாஜக புதிய வரலாறு ! ஜடேஜா மனைவி, மேவானி, படேல் முன்னிலை
ஏசியாநெட் நியூஸ், குஜராத் தேர்தலுக்கு முன் கருத்துக் கணிப்பு நடத்தியது. குஜராத்தில் ஒரு லட்சத்து 82ஆயிரத்து557 வாக்களர்களிடம் கேள்விப்பட்டியல் தயாரித்து, அறிவியல் ரீதியாக கருத்துக்கணிப்புகளை நடத்தி, அதன் ஆய்வு முடிவுகளை தேர்லுக்கு முன் வெளியிட்டிருந்தது.
அதில் தற்போதுள்ள சூழலில் மக்களின் எண்ணத்தின் அடிப்படையில் குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட்டால், பாஜக மிகப்பெரியவெற்றியை பெறும். அதாவது, 133 இடங்கள் முதல் 143 இடங்களைக் கைப்பற்றும் என்று ஏசியாநெட் நியூஸ் தெரிவித்திருந்துது.
தற்போது தேர்தல் வாக்கு எண்ணிக்கையும், பாஜக 158 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது, இதுவரை 22 தொகுதிகளில் பாஜக வெற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பார்த்தால், 136 தொகுதிகளில் பாஜக தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வராத நிலையில் பாஜக 150 இடங்களுக்கும் அதிகமாகவே கைப்பற்ற வாய்ப்புள்ளது.
புதிய வரலாறு! குஜராத்தில் பாஜக 7-வது முறையாக ஆட்சி அமைக்கிறது
இதைத்தான் ஏசியாநெட் நியூஸ் தேர்தலுக்கு முன்பே கணித்து, பாஜக 143இடங்கள் அதற்கும் அதிகமாகவே பிடிக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்திருந்தது. அதேநேரம், வாக்கு சதவீதமும் பாஜகவுக்கு 50 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தது. அதேபோன்றே இந்தத் தேர்தலில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக பாஜக கைப்பற்றியுள்ளது.
காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் 31 இடங்களைப் பிடிக்கும் என ஏசியாநெட் தெரிவித்திருந்தது. கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் கிடைத்த இடங்களை விட காங்கிரஸ் கட்சிக்கு இடங்கள் பாதியாகக் குறையும் என்றும், காங்கிரஸின் வாக்கு வங்கியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றும் என ஏசியாநெட் நியூஸ் தெரிவித்திருந்தது.
அதுபோலவே காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 16 தொகுதிகளில்தான் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் வாக்கு சதவீதமும் குறைந்து, இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 27சதவீதம் மட்டுமே பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்தபட்சம் 10 சதவீதம் வரை குறையக்கூடும், அந்த வாக்கு சதத்தை ஆம் ஆத்மி கட்சிஅறுவடை செய்யும் என்று ஏசியாநெட் நியூஸ் கணித்திருந்தது.
மோடியின் சொந்த ஊர் தொகுதியைக் இந்த முறை கைப்பற்றுகிறது பாஜக: காங்கிரஸ் தோல்வி
ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் 10 சதவீதம் வரை வாக்குசதவீதத்தை கைப்பற்றும், 5 முதல் 14 இடங்களை கைப்பற்றும் என ஏசியாநெட் நியூஸ் தெரிவித்திருந்தது. அதேபோல தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களில்தான் முன்னிலையில் இருக்கிறது. வாக்கு சதவீதத்திலும் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 12 சதவீதத்தை ஆம் ஆத்மி பிடித்துள்ளது.