Narendra Modi:பிரதமர் மோடி-யின் வெளிநாட்டு பயணம்! செலவு விவரத்தை வெளியிட்ட மத்திய அரசு

Published : Feb 03, 2023, 11:26 AM IST
Narendra Modi:பிரதமர் மோடி-யின் வெளிநாட்டு பயணம்! செலவு விவரத்தை வெளியிட்ட மத்திய அரசு

சுருக்கம்

Narendra Modi abroad trips: பிரதமர் மோடி கடந்த 2019ம் ஆண்டிலிருந்து 21 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார் என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Narendra Modi abroad trips: பிரதமர் மோடி கடந்த 2019ம் ஆண்டிலிருந்து 21 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார் என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் கடந்த 2019ம் ஆண்டிலிருந்து எத்தனை நாடுகளுக்கு பயணம் செய்துள்ளனர், அதற்காக மத்திய அரசு செலவிட்ட தொகை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

பட்ஜெட்டா, மளிகைக் கடை பில் மாதிரி இருக்கு: நிர்மலா சீதாராமனை விளாசிய சுப்பிரமணியன் சுவாமி

இதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி முரளிதரண் நேற்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அவர் கூறியதாவது:

குடியரசுத் தலைவர் கடந்த 2019ம் ஆண்டில் இருந்து 8 முறை வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். இதற்காக மத்திய அரசு ரூ.6 கோடியே 24 லட்சத்து 31 ஆயிரத்து 442 செலவிட்டுள்ளது. 

பிரதமர் மோடி கடந்த 2019ம் ஆண்டில் இருந்து 21 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இதற்காக மத்திய அரசு ரூ.22 கோடியே, 76 லட்சத்து,76ஆயிரத்து 934 செலவிட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் பயணத்துக்கு ரூ.20 கோடியே 87 லட்சத்து ஆயிரத்து 475 செலவிடப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டிலிருந்து குடியரசுத் தலைவர் 8 முறையும், பிரதமர் மோடி 21 முறையும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளனர். 

தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவதை தடைசெய்ய கோரிய மனு தள்ளுபடி

2019ம் ஆண்டிலிருந்து பிரதமர் மோடி ஜப்பானுக்கு 3 முறையும், அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகளுக்கு தலா 2 முறையும் பயணம் செய்துள்ளார். குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் 8 முறை வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார். தற்போதுள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கடந்த ஆண்டு செப்டம்பரில் பிரிட்டன் சென்று திரும்பியுள்ளார்.

இவ்வாறு முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் குடியரசுத் தலைவர் உரையும், அதன்பின் பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல் அமர்வு பட்ஜெட் கூட்டத் தொடரை வரும் 10ம் தேதிக்கு முன்பாகவே முடிக்க பெரும்பாலான எம்.பி.க்கள் மக்களவைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவி்க்கும் தீர்மானம், அதில் பிரதமர் பதில் உள்ளிட்டவை முடிந்தபின், முதல் அமர்வு 10ம் தேதிக்கு முன்பாக முடிக்கப்படும் எனத் தெரிகிறது. 


 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!