ராமநாதபுரம் – சென்னை இடையே விரைவில் விமான சேவை… நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!!

By Narendran SFirst Published Feb 2, 2023, 11:30 PM IST
Highlights

ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி,  தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலையத்தை அமைப்பதற்கு மத்திய அரசு ஏதேனும் முன்மொழிந்து உள்ளதா? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே சிங், பதிலளித்து பேசினார்.

இதையும் படிங்க: தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவதை தடைசெய்ய கோரிய மனு தள்ளுபடி

அப்போது, 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உதான் திட்டத்தின் கீழ் தேவைக்கு ஏற்ப நகரங்களை இணைக்க கூடிய வகையில் விமான சேவைகள் நடைபெற்று வருகிறது. உதான்  திட்டத்தின் கீழ் மூன்றாவது சுற்று ஏலத்தில் ராமநாதபுரத்தில் உள்ள கடலோர காவல் படைக்கு சொந்தமான விமானத் தலத்தை, இந்தத் திட்டத்தின் கீழ் செயல்படுத்த மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது.

இதையும் படிங்க: பட்ஜெட்டா, மளிகைக் கடை பில் மாதிரி இருக்கு: நிர்மலா சீதாராமனை விளாசிய சுப்பிரமணியன் சுவாமி

கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி ராமநாதபுரத்தில் இருந்து சென்னை இணைக்க கூடிய வகையில் உதான் திட்டத்தின் கீழ் விமானத்தை இயக்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட 180 நாட்களுக்குள் அல்லது விமான நிலையம் தயாராகி இரண்டு மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு விமான நிறுவனம் விமானத்தை இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கும் என்று தெரிவித்தார். 

click me!