இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் பிரிவு 33(7), தேர்தல்களில் ஒரு நபர் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதை அனுமதிக்கிறது.
தேர்தல்களில் ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதை தடைசெய்ய கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் பிரிவு 33(7), தேர்தல்களில் ஒரு நபர் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதை அனுமதிக்கிறது. இதனை அம்சத்தை நீக்கவேண்டும் என்று கோரி அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி பி.எஸ். நரசிம்மா, நீதிபதி ஜே. பி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றால், ஒரு இடத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதால், இடைத்தேர்தல்கள் தொடர்ந்து வரும். பொது கருவூலத்தில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் இந்த அம்சம் தேவையற்றது என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
மேலும், “பல்வேறு காரணங்களுக்காக ஒரு நபர் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிடலாம். இது ஜனநாயகத்தின் போக்கை மேம்படுத்துமா என்பதை முடிவு செய்வது பாராளுமன்றத்தின் கையில்தான் உள்ளது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஒரு வேட்பாளரை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களுக்கு போட்டியிட அனுமதிப்பதா வேண்டாமா என்பது பற்றி நாடாளுமன்றமே முடிவெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.