Siddique Kappan: ஹத்ர்ராஸ் வன்கொடுமை வழக்கில் கைதான சித்திக் காப்பான் விடுதலை

By SG BalanFirst Published Feb 2, 2023, 1:07 PM IST
Highlights

சித்திக் காப்பானுக்கு 2 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு இன்று இவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. ஜாமீன் பத்திரங்களைச் சமர்ப்பித்தபின் விடுவிக்கப்பட்டார்.

ஹத்ர்ராஸ் வன்கொடுமை வழக்கில் செய்தி சேகரிக்கச் சென்றபோது கைதான சித்திக் காப்பான் இரண்டு ஆண்டுகள் கழித்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராசில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இதில் தொடர்புடைய குற்றவாளிகளை காப்பாற்ற காவல்துறையினரே அந்தப் பெண்ணின் உடலை ரகசியமாக எரித்துவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற சித்திக் கப்பான் மதுராவில் கைது செய்யப்பட்டார். காப்பானுக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்பு உள்ளது என்றும் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை சர்ச்சைக்கு உள்ளாக்க முயல்வதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கம்பெனியின் வளர்ச்சிக்கு பாடுபட்டால் கார் பரிசு! ஊழியர்களை ஊக்குவிக்கும் ஐ.டி. நிறுவனம்

 

இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவருக்கு ஜாமீன் பெற்றபோதும், உடனடியாக இவர்மீது அமலாக்கத்துறை சார்பில் பணமோசடி வழக்கு தொடரப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு இன்று இவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. லக்னோவில் உள்ள பணமோசடி தடுப்புக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான இரண்டு ஜாமீன் பத்திரங்களைச் சமர்ப்பித்தார். இதனால் இன்று காலை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

“நல்ல காரியத்திற்காக 28 மாதம் சிறையில் இருந்தேன். ஒரு தலித் சிறுமிக்கு நீதி கிடைப்பதற்காக, செய்தியை‌ திரட்ட சென்றபோது பொய் வழக்கில் என்னைக் கைது செய்தனர்” என்றும், “தலித்துகள், பெண்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்காக தொடர்ந்து போராடுவேன்” என உறுதி கூறினார்.

Kannur Car Fire: தீப்பிடித்த கார்... வெளியேற முடியாமல் மாட்டிக்கொண்ட கர்ப்பிணி பல

click me!