Adani Power Share Price:அதானி பவர் நிறுவனத்துக்கு சிக்கல்! கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

Published : Feb 02, 2023, 01:07 PM IST
Adani Power Share Price:அதானி பவர் நிறுவனத்துக்கு சிக்கல்! கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

சுருக்கம்

  adani power share price: மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் அதானி பவர் நிறுவனத்தின் உயர் மின் அழுத்த கம்பிகள் விவசாய நிலங்களுக்குள் செல்வதற்கு எதிராக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

adani power share price: மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் அதானி பவர் நிறுவனத்தின் உயர் மின் அழுத்த கம்பிகள் விவசாய நிலங்களுக்குள் செல்வதற்கு எதிராக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பராகா பகுதியில் ஏராளமான விவசாயிகள் மாமரங்கள், லிச்சி சாகுபடி செய்துள்ளனர். இந்த தோட்டங்களுக்கு இடையே அதானி பவர் நிறுவனத்தின் உயர் மின்அழுத்த கம்பிகள் செல்கின்றன.

அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்: மக்களவை ஒத்திவைப்பு

ஜார்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் இருந்து வங்கதேசம் வரை இந்த மின்அழுத்தக் கம்பிகள் மூலம் மின்சாரத்தை அதானி பவர் கொண்டு செல்கிறது. இந்த உயர்அழுத்த மின் கம்பிகளால் விவசாயிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிகிறது, வேளாண்மையும் பாதிப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள்.

இதையடுத்து, ஜனநாயக உரிமைக்கான கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் சங்கம் சார்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் “ அதானி பவர் நிறுவனத்தின் உயர்மின் அழுத்த கம்பிகள் செல்வதால் விவசாயிகளால் வேளாண்மையை முறையாகச் செய்ய முடிவதில்லை.

மத்திய பட்ஜெட்டில் குறிப்பிட்ட ‘அமிர்த காலம்’ என்றால் என்ன?

ஏற்கெனவே இதுபோன்று உயர் மின்அழுத்த கம்பி அமைப்பதற்கு எதிராகப் போராட்டம் நடத்தினோம் ஆனால் போலீஸாரை பயன்படுத்தி எங்களை அடித்து, அடக்கிவிட்டார்கள். ஆதலால்,கம்பியை வேறு இடத்துக்கு மாற்றித்தர உத்தரவிடக் கோரி அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, ராஜஸ்ரீ பரத்வாஜ் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்தமனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அமர்வு, வரும் 7ம் தேதி விசாரிப்பதாகத் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

செய்த பாவத்திற்குப் பிராயச்சித்தம்.. திருப்பதி திருட்டு வழக்கில் ரவிக்குமார் வாக்குமூலம்!
என் புருஷன் என்னை ஏமாத்திட்டாரு.. பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் பெண் உருக்கமான கோரிக்கை!