2 வருஷமா சம்பளம் வாங்காமல் உழைக்கும் அம்பானி! ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருக்கு வந்த சோதனை!

Published : Jul 31, 2023, 12:09 AM ISTUpdated : Jul 31, 2023, 12:17 AM IST
2 வருஷமா சம்பளம் வாங்காமல் உழைக்கும் அம்பானி! ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருக்கு வந்த சோதனை!

சுருக்கம்

2023இல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிகபட்ச காலாண்டு நிகர லாபம் ஈட்டியுள்ளது. ஆனால், முகேஷ் அம்பானி இரண்டு ஆண்டுகளாக சம்பளமே வாங்கவில்லை.

ஏப்ரல் 2023 இல் தனது போட்டியாளரான கௌதம் அதானி 24வது இடத்திற்குத் தள்ளப்பட்டதை அடுத்து, முகேஷ் அம்பானி ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக மீண்டும் தனது இடத்தைப் பிடித்தார் என்று போர்ப்ஸ் அறிக்கை கூறியது. இந்த அறிக்கை ஃபோர்ப்ஸ் பில்லியனர் 2023 பட்டியலுடன் வெளியிடப்பட்டது. கடந்த ஜூலை 19ஆம் தேதி நிலவரப்படி, போர்ப்ஸ் பட்டியலில் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 101 பில்லியன் டாலர். இந்திய மதிப்பில் சுமார் 82,93,46,35,00,000 ரூபாய்!

இருப்பினும், தனது முதன்மை நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைவராக இருப்பதற்காக முகேஷ் அம்பானி சம்பளம் பெறுகிறார் என்பது பலருக்கும் தெரியாது.

தண்ணீர் கேட்ட மாற்றுத் திறனாளியை தாக்கிய ஜவான்கள்! வைரலாகும் உ.பி.யில் நடந்த கொடுமை!

முகேஷ் அம்பானியின் சம்பளம்

2008-09இல் தனது சம்பளத்தை ரூ.15 கோடி வரம்புக்குள் கட்டுப்படுத்தினார். அதற்கு முன் ஆண்டுக்கு ரூ.24 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெற்று வந்தார். கோரோனா தொற்று காரணமாக வணிகத்தையும் பொருளாதாரத்தையும் பாதித்த நிலையில், முகேஷ் அம்பானி தனது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சம்பளம் பெறவில்லை.

2020-21 மற்றும் 2021-2022 நிதியாண்டுகளுக்கு அம்பானி சம்பளம் ஏதும் பெறவில்லை என் ரிலையன்ஸ் ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அம்பானி இந்த இரண்டு வருடங்களிலும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக தனது பதவிக்காக எந்த ஆதாயமும் பெறவில்லை என்றும் அந்நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

பேஷன் உடைகளுக்காக பாராட்டு பெற்ற பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்‌ஷதா மூர்த்தி!

நிகர லாபம் உயர்வு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பங்குச் சந்தையில் தாக்கல் செய்த மார்ச் காலாண்டு அறிக்கையில் நிகர லாபம் 19 சதவீதம் உயர்ந்து ரூ.19,299 கோடியாக அதிகரித்திருக்கிறது எனக் குறிப்பிட்டப்பட்டுள்ளது. ஜனவரி-மார்ச் 2023 இல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஈட்டிய இந்த நிகர லாபம் அந்த நிறுவனத்தின் அதிகபட்ச காலாண்டு நிகர லாபம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மண் அள்ளி செல்ஃபி எடுங்கள்! சுதந்திர தினம் கொண்டாட புதுசா ஐடியா கொடுக்கும் பிரதமர் மோடி

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!