pfi banned in india: பிஎப்ஐ அமைப்பு ஈடுபட்ட குற்றங்கள் என்ன? பட்டியலிடும் மத்திய அரசு

By Pothy RajFirst Published Sep 28, 2022, 9:04 AM IST
Highlights

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கும் அது தொடர்புடைய பல்வேறு அமைப்புகளுக்கும் மத்தியஅரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ள நிலையில், அந்த அமைப்பு ஈடுபட்ட குற்றங்கள் குறித்து மத்திய உள்துறைஅமைச்சகம் விளக்கியுள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கும் அது தொடர்புடைய பல்வேறு அமைப்புகளுக்கும் மத்தியஅரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ள நிலையில், அந்த அமைப்பு ஈடுபட்ட குற்றங்கள் குறித்து மத்திய உள்துறைஅமைச்சகம் விளக்கியுள்ளது.

தீவிரவாத செயல்களுக்கு துணை செய்தல், நிதி திரட்டுதல் ஆகியவற்றில் ஈடுபடுவதாக புகார் எழுந்ததையடுத்து, 19 மாநிலங்களில் என்ஐஏ அமைப்பினர் இரு கட்டங்களாக பிஎப்ஐ அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் கடந்த வாரம் சோதனை நடத்தினர். 

பிஎப்ஐ அமைப்பு, துணை அமைப்புகளுக்கு தடை ஏன்? மத்திய அரசின் 10 காரணங்கள்

இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள், ஆதாரங்களை என்ஐஏ அமைப்பினர் கைப்பற்றினர். 19மாநிலங்களி்ல் இருந்து 200க்கும் மேற்பட்ட பிஎப்ஐ அமைப்பினர், அது தொடர்பான அமைப்பைச் சேர்ந்தவர்கள், தொடர்புள்ளவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதுசார்ந்த அமைப்புகள், துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, “ பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவின் துணை அணைப்புகளாக ரிஹாப் இந்தியா பவுண்டேஷன்(ஆர்ஐஎப்)தேசிய மனித உரிமைகளுக்கான கூட்டமைப்பு(என்சிஹெச்ஆர்ஓ), தேசிய பெண்கள் முன்னணி, ஜூனியர் பிரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேஷன், அனைத்து இந்திய இஸ்லாமிக் கவுன்சில்(ஏஐஐசி), கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா(சிஎப்ஐ) ஆகிய அமைப்புகளுக்கும்” சட்டவிரோத செயல்கள் தடைச் சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு 5 ஆண்டுகள் தடை: எந்தெந்த அமைப்புகள்? மத்திய அரசு அதிரடி

இந்த அமைப்புகளுக்கு ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு செய்த குற்றச் செயல்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

1.    சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிஎப்ஐ அமைப்பும் அது சார்ந்த அமைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளன. பிஎப்ஐ அமைப்பு பல்வேறு கிரிமினல் குற்றங்களிலும், நாட்டின் அரசியலமைப்புச் சட்ட அமைப்புகளுக்கு அவமரியாதை செய்தும், வெளிநாடுகளில் இருந்து நிதியுதவியும் பெற்றது. இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்ககூடியதாக இருந்தது.

2.    பல்வேறு கொலை வழக்குகள், சதி வழக்குகளில் நடத்தப்பட்ட விசாரணையில் அதன் பின்னணியில் பிஎப்ஐ அமைப்பினர் இருப்பது தெரியவந்தது. பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலரை இதுபோன்ற குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. 

3.    பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலர் தீவிரவாத செயல்களிலும், கொலை குற்றச்செயல்களிலும் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. சன்ஜித்(கேரளா,2021நவம்பர்), வி.ராமலிங்கம்(2019, தமிழகம்), நந்து(கேரளா,2021), ஆர்.ருத்ரேஷ்(கர்நாடகா,206), பிரவீண் பூஜாரி(கர்நாடகா, 2016), சசி குமார்(தமிழகம் 2016), பிரவீண் நெட்டாரு(கர்நாடகா, 2022) இந்த கொடூர கொலை வழக்குகளில் பிஎப்ஐ உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் நோக்கம் பொதுஅமைதியைக் குலைத்தல், மக்களிடையே பதற்றத்தையும், ஒற்றுமையின்மையைும் ஏற்படுத்துதலாகும்.

பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த பிஎப்ஐ அமைப்பு சதித்திட்டம்: அம்பலப்படுத்திய அமலாக்கப் பிரிவு

4.    பிஎப்ஐ அமைப்புக்கும், சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐஎஸ் தீவிரவாதஅமைப்புக்கும் தொடர்பு இருக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்த பலரும் ஐஎஸ்தீவிரவாத அமைப்பில் சேர்வதற்காக சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக் சென்று அந்த அமைப்பில் இணைந்தனர். ஐஎஸ்தீவிரவாத அமைப்புடன் மறைமுகமாக தொடர்பில் இருந்த பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்த பலரை மாநில போலீஸாரும், மத்திய விசாரணை முகமையும் கைது செய்துள்ளது. வங்கதேசத்தைச் சேர்ந்த ஜமாத்உல் முஜாகிதீன் பங்களாதேஷ் அமைப்புடன் பிஎப்ஐ அமைப்புக்கு தொடர்புள்ளது.


5.    வெளிநாடுகளில் இருந்தும், ஹவாலா மூலமும், வங்கிப் பரிமாற்றத்தின் மூலமும் பிஎப்ஐஅமைப்பும், நிர்வாகிகளும் ஏராளமான பணத்தை நன்கொடையாகப் பெற்றுள்ளனர். இந்த பணத்தின் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகள், தீவிரவாதச் செயல்கள், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களை செய்ய பயன்படுத்தியுள்ளனர்.

6.    பிஎப்ஐ அமைப்பு பல்வேறு வங்கிகளில் செய்த முதலீட்டுக்கு முறையான ஆவணங்கள், கணக்குகளை வருமானவரித்துறையிடம் அளிக்கவில்லை, நன்கொடைக்கான முகாந்திரமும், விவரங்களும் இ்ல்லை. இதையடுத்து, பிஎப்ஐ அமைப்பின் பதிவை வருமானவரிச்சட்டம் 12ஏ மற்றும் 12ஏஏ ஆகிய பிரிவின் கீழ் ரத்து செய்துள்ளது.

7.    உத்தரப்பிரதேசம்,கர்நாடகா, குஜராத்அரசுகள்  ஏற்கெனவே பிஎப்ஐ அமைப்பை தங்கள் மாநிலங்களில் தடை செய்துள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

click me!