pfi ban: pfi: nia:பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு 5 ஆண்டுகள் தடை: எந்தெந்த அமைப்புகள்? மத்திய அரசு அதிரடி

By Pothy RajFirst Published Sep 28, 2022, 6:59 AM IST
Highlights

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அது சார்ந்த அமைப்புகள், துணை அமைப்புகள் ஆகியவற்றுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அது சார்ந்த அமைப்புகள், துணை அமைப்புகள் ஆகியவற்றுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவின் துணை அணைப்புகளாக ரிஹாப் இந்தியா பவுண்டேஷன்(ஆர்ஐஎப்)தேசிய மனித உரிமைகளுக்கான கூட்டமைப்பு(என்சிஹெச்ஆர்ஓ), தேசிய பெண்கள்முன்னணி, ஜூனியர் பிரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேஷன், அனைத்து இந்திய இஸ்லாமிக் கவுன்சில்(ஏஐஐசி), கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா(சிஎப்ஐ) ஆகிய அமைப்புகளுக்கும் சேர்த்து தடை விதித்துள்ளது மத்திய அரசு இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

குறிப்பிட்ட தலைவர்களுக்கு குறி! இளைஞர்களை தீவிரவாத அமைப்பில் சேர்க்க பிஎப்ஐ முயற்சி: என்ஐஏ அறிக்கை

தீவிரவாத செயல்களுக்கு துணை செய்தல், நிதி திரட்டுதல் ஆகியவற்றில் ஈடுபடுவதாக புகார் எழுந்ததையடுத்து, 11 மாநிலங்களில் என்ஐஏ அமைப்பினர் பிஎப்ஐ அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். 

இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள், ஆதாரங்களை என்ஐஏ அமைப்பினர் கைப்பற்றினர். 11மாநிலங்களி்ல் இருந்து 106 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் கேரளாவில் அதிகபட்சமாக 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

என்ஐஏ சோதனை 2வது சுற்று: 8 மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட பிஎப்ஐ அமைப்பினர் கைது

இந்நிலையில் 2வது சுற்றாக நேற்று 8 மாநிலங்களில் தேசிய விசாரணை முகமை சோதனை நடத்தியது. இதில் 150க்கும் மேற்பட்ட பிஎப்ஐ அமைப்புடன் தொடர்பில் இருப்போர், பிஎப்ஐ அமைப்பினர் உள்ளிட்டோரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சூழலில் மத்திய அரசு இந்தத் தடையை விதித்துள்ளது.

 

click me!