ashok gehlot:congress:அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேருக்கு எதிராக நோட்டீஸ்: காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை

By Pothy Raj  |  First Published Sep 28, 2022, 6:52 AM IST

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்  ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேருக்கு எதிராக ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்ககூடாது எனக் கேட்டு காங்கிரஸ் மேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்  ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேருக்கு எதிராக ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்ககூடாது எனக் கேட்டு காங்கிரஸ் மேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராஜஸ்தான் அமைச்சர்கள் சாந்தி தாரிவால், மகேஷ் ஜோஷி, தர்மேந்திர ரத்தோர் ஆகியோர் எம்எல்ஏக்களை அழைத்து தனியாக்க கூட்டம் நடத்தினர். அதேசமயம், மேலிடப் பார்வையாளர்கள் வந்து எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தியபோது அதில் பங்கேற்கவில்லை. 

Tap to resize

Latest Videos

இந்த ஒழுங்கீனமான செயலுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலிடப் பார்வையாளர்கள் மல்லிகார்ஜுன கார்கே, அஜெய் மகான் ஆகியோர் சோனியா காந்திக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக இருந்தது. இதனால் அடுத்த முதல்வராக துணை முதல்வராக இருக்கும் சச்சின் பைலட் வருவார் எனக் கூறப்பட்டது. ஆனால் இதற்கு அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் 90க்கும் மேற்பட்டோர் எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று முன்தினம் சபாநாயகரைச் சந்தித்து தாங்கள் ராஜினாமா செய்யப்போவதாகத் தெரிவித்தனர். 

சிவசேனா கட்சி விவகாரம்… உத்தவ் தாக்கரேவின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்!!

இதையடுத்து, ராஜஸ்தானில் நிலவும் சூழல் குறித்து அறிய மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, அஜெய் மகான் இருவரையும் தலைவர் சோனியா காந்தி அனுப்பினார்.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அசேக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் யாரும், மேலிடப் பார்வையாளர்களான கார்கே, மகான் முன்நிலையில் வரவில்லை. மாறாக, அமைச்சர் சாந்தி தாரிவால், காங்கிரஸ் தலைவர் மகேஷ் ஜோஷி, ரத்தோர் தலைமையில் 82 எம்எல்ஏக்கள் தனியாகக்கூட்டம் நடத்தினர். 

இதனால் அதிருப்தி அடைந்த மல்லிகார்ஜூன கார்கே, அஜெய் மகான், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நடந்து கொண்டதும், அவர்கள் தனியாகக் கூட்டம் நடத்தியதும் ஒழுக்கக்கேடான செயல் என்று தெரிவித்து டெல்லி புறப்பட்டனர்.

இதையடுத்து, ராஜஸ்தானில் எம்எல்ஏக்கள் நடந்து கொண்ட விதம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே, அஜெய் மகான் இருவரும் சோனியா காந்திக்கு அறிக்கை அளித்தனர். அந்த அறிக்கையில் ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒட்டுமொத்தமாக ஒழுங்கீனமாக நடந்து கொண்டனர் எனத் தெரிவித்தனர்.

செப்.29 அன்று மீண்டும் தமிழகம் வருகிறார் ராகுல்... கூடலூரில் 2 நாள் பாதயாத்திரை!!

இதையடுத்து, காங்கிரஸ் செயலாளர் தாரிக் அன்வர், ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தாரிவால், ஜோஷி, ரத்தோர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் “ காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர்கள் அளித்த அறிக்கையில், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்கான முகாந்திரம் இருக்கிறது. ஆதலால் அதற்கு விளக்கம் அளிக்கக் கோரியும் ஏன் உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது எனக் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். நோட்டீஸ் கிடைத்த 10 நாட்களுக்குள் காங்கிரஸ் தலைமைக்கு பதில் அளிக்க வேண்டும். 

மேலிடப்பார்வையாளர்கள் வந்து எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தியபோது, அதற்கு இணையாக தாரிவால் தனியாக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தியது ஒட்டுமொத்த ஒழுக்கக்கேடான செயல். தனிப்பட்டமுறையில் கூட்டம் நடத்தியது எம்எல்ஏக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, எது அதிகாரப்பூர்மானது என்ற சந்தேகத்தை எழுப்பும். 

உயிருடன் சமாதியாக முயன்ற சாது: பூமிக்கு அடியில் இருந்து மீட்ட உ.பி. போலீஸார்: வீடியோ

அனைத்து எம்எல்ஏக்களும் தனிப்பட்ட முறையில் மேலிடப் பார்வையாளர்களிடம் கருத்துக் கூற அனுமதிக்கப்பட்டது, நடுநிலையுடன் அறிக்கையை காங்கிரஸ் தலைமைக்கு அளிப்போம் என்று தெரிவிக்கப்பட்டது. எந்த முடிவும் வெறுப்புணர்வோடு எடுக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எம்எல்ஏக்களின் உணர்வுகளை அறிந்து ஒவ்வொருவரின் முடிவையும் கேட்டுத்தான் தலைமை முடிவு எடுக்கும்” எனத் தெரிவித்திருந்தது.

click me!