அக்.1 முதல் சாலைகளில் மீன்களை விற்க தடை... எங்கு? ஏன்?

By Narendran SFirst Published Sep 27, 2022, 11:47 PM IST
Highlights

அக்டோபர் 1 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் மகாத்மா காந்திசாலை, குபேர் மார்க்கெட்டினை சுற்றிலுள்ள சாலைகளில் மீன்கள் விற்க தடை விதித்து நகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அக்டோபர் 1 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் மகாத்மா காந்திசாலை, குபேர் மார்க்கெட்டினை சுற்றிலுள்ள சாலைகளில் மீன்கள் விற்க தடை விதித்து நகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி நகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் பிரிவு 133 கீழ் (பொது இடத்திற்கு இடையூறு ஏற்படுத்தல்) அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மகாத்மா காந்திசாலை, குபேர் மார்க்கெட்டினை சுற்றிலுள்ள சாலைகளில் மொத்த வியாபாரிகள் வரும் 1 ஆம் தேதி முதல் மீன்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 12 ஆண்டுகளுக்கு பின்னர் பூத்த குறிஞ்சி மலர்கள்: பார்வையாளர்கள் உற்சாகம்

மேலும் உழவர்கரை, புதுச்சேரி நகராட்சி அடையாளப்படுத்தியுள்ள மார்க்கெட் பகுதியில் மட்டுமே மீன்களை விற்க வேண்டும். சாலைகளில் மீன்கள் விற்க கூடாது. அத்துடன் இ.சி.ஆரில் உள்ள நவீன மீன் அங்காடியில் மட்டுமே இனி மொத்த வியாபாரிகள் மீன்களை ஏலம் விட வேண்டும்.

இதையும் படிங்க: செப்.29 அன்று மீண்டும் தமிழகம் வருகிறார் ராகுல்... கூடலூரில் 2 நாள் பாதயாத்திரை!!

குபேர் மார்க்கெட்டில் மீன் சில்லரை விற்பனை காலை 6 மணிக்கு பிறகே துவங்க வேண்டும். அதற்காக மீன் மார்க்கெட்டினை 6 மணிக்கு பிறகு திறக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடையுத்தரவை மீறி சாலையில் மீன்களை விற்கும் வாகனங்களை பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

click me!