புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பது பற்றி இங்கு காணலாம்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடைபெறவில்லை. இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு நேற்று தொடங்கியது. நேற்றைய கூட்டத்தொடரில் பழைய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு விடை கொடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அவை நடவடிக்கைகள் புதிய நாடாளுமன்றத்துக்கு இன்று மாறவுள்ளது.
டெல்லியில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டடம் அமைந்துள்ளது. இந்த சூழலில் பிரம்மாண்டமான புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் டெல்லியில் 4 மாடிகளைக் கொண்ட ரூ.970 கோடி மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்றம் முக்கோண வடிவில் கட்டப்பட்டுள்ளது. இதனை கடந்த மே மாதம் 28 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?
** புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடம் பழைய கட்டடத்தை விட பெரிய விஸ்தாரமான அறைகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
** புதிய கட்டடத்தின் கட்டுமான பணிகளை டாடா நிறுவனம் மேற்கொண்டது.
** இந்தியாவின் தேசிய பறவையான மயிலை அடிப்படையாகக் கொண்டு, புதிய மக்களவை கட்டடம் 888 இருக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
** தேசிய மலரான தாமரையை அடிப்படையாக கொண்டு மாநிலங்களவை 348 இடங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
** இரண்டு அவைகளின் கூட்டுக்கூட்டத்தை நடத்தும் வகையில் 1,272 இருக்கைகளுடன் அரங்கம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
பழிக்குப் பழி! கனடாவின் தூதரக அதிகாரி 5 நாட்களில் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!
** புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் ஆயுட்காலம் 150 ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
** திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் வழங்கப்பட்ட செங்கோல் மக்களவையில் சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ளது.
** புதிய நாடாளுமன்ற வளாகத்தின் மையத்தில் 'அரசியலமைப்பு மண்டபம்' என்ற மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
** நாடாளுமன்றக் கட்டடத்தின் திறந்த முற்றத்தில் தேசிய மரமான ஆலமரமும் உள்ளது
** நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட நூலகம், நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களுடன் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
** புதிய நாடாளுமன்றக் கட்டட்ட வளாகம் பிளாட்டினம்-மதிப்பீடு செய்யப்பட்ட பசுமைக் கட்டிடம் என்ற அங்கீகாரம் பெற்றுள்ளது.
** 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் 5,000 கலை படைப்புகள் இடம்பெற்றுள்ளன.
** புதிய பாராளுமன்ற கட்டிடம், கலாச்சார, பிராந்திய கலைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் உட்பட நவீன இந்தியாவின் பன்முகத்தன்மையை உள்ளடக்கிய இந்திய பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவமாக செயல்படும்.