“நாங்கள் அவருக்கு பணம் அனுப்பினோம் என்று கமல்நாத் கூறினார்... கமல்நாத், சஞ்சய் காந்தி இருவரும் பிந்திரன்வாலேக்கு பணம் அனுப்பியுள்ளனர்…” என்று சித்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல்நாத் மற்றும் சஞ்சய் காந்தி ஆகியோர் 1984ஆம் ஆண்டு ஆபரேஷன் புளூ ஸ்டார் மூலம் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தலைவர் ஜர்னைல் சிங் பிந்திரன்வாலேவுக்கு பணம் அனுப்பியதாக ரா உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரி ஜிபிஎஸ் சித்து கூறியிருக்கிறார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, இதனை சித்து தெரிவித்துள்ளார். அப்போதைய அரசியல் தலைமை இந்துக்களை பயமுறுத்துவதற்கு பிந்த்ரன்வாலேவை பயன்படுத்தியதாகவும், அதன் மூலம் காலிஸ்தான் பிரச்சனையை உருவாக்கி நாட்டின் ஒருமைப்பாடு குறித்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த நினைத்ததாவும் சித்து தெரிவித்துள்ளார்.
அன்றே சொன்ன ராகுல் காந்தி... பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிபந்தனையற்ற ஆதரவு! வைரலாகும் பழைய கடிதம்
இதற்காக சக்திவாய்ந்த நபர் ஒருவரை நியமிக்க அவர்கள் திட்டமிட்டனர் என்றும் சித்து சொல்கிறார். “நான் அப்போது கனடாவில் இருந்தேன். காங்கிரஸ் ஏன் பிந்தரன்வாலேவுடன் முட்டிமோதுகிறது என்று மக்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்..." என்றார்.
தொடர்ந்து பேசிய சித்து, "அப்போதுதான் எங்கள் முயற்சியைச் செய்யக்கூடிய சக்திவாய்ந்த நபர் ஒருவரை நியமிக்க விரும்புகிறோம் என கமல்நாத் கூறினார்... நாங்கள் அவருக்கு பணம் அனுப்பினோம் என்று கமல்நாத் கூறினார்... கமல்நாத், சஞ்சய் காந்தி இருவரும் பிந்திரன்வாலேக்கு பணம் அனுப்பியுள்ளனர்…” என்கிறார்.
பிந்திரன்வாலே காலிஸ்தான் வேண்டும் என்று ஒருபோதும் கேட்கவில்லை எனக் கூறிய முன்னாள் RAW அதிகாரி சித்து, “பிந்தரன்வாலே தனது வாழ்நாளில் காலிஸ்தான் வேண்டும் என்று கேட்கவே இல்லை. இந்திரா காந்தி அதை என் பையில் திணித்தாலும் அதை நான் மறுத்துவிடுவேன் என்பார். அவர்கள் மதச் பிரச்சாரம் செய்யவில்லை, அவர்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினார்கள்” என்றும் சித்து கூறியுள்ளார்.
அரசியல் சாசனப் புத்தகத்துடன் புதிய நாடாளுமன்றத்தில் அடி எடுத்து வைக்கும் பிரதமர் மோடி