மேற்கு வங்கத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கடந்த 2 நாட்களில் 2வதுமுறையாக கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கடந்த 2 நாட்களில் 2வதுமுறையாக கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்முறையாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கடந்த மாதம் 30ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆனால், வர்த்தகரீதியான சேவையை கடந்த 1ம் தேதி வந்தே பாரத் ரயில் தொடங்கியது இந்த ரயில் ஹவுரா மற்றும் நியூ ஜல்பைகுரி நகரங்கலுக்கு இடையே வாரத்துக்கு 6 நாட்கள் இயக்கப்படுகிறது.
4 நாள்ல வேலைய காட்டிட்டிங்களே! ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு: கண்ணாடிகள் சேதம்
இந்த ரயில் 7.5 மணிநேரம் பயணித்து, மால்டா நகரம், பர்சோய், கிசான்கஞ்ச் நகரங்களைக் கடந்து ஜல்பைகுரி செல்லும். ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து காலை 6மணிக்குப் புறப்படும் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில், நியூ ஜல்பைகுரிக்கு பிற்பகல் 1.30 மணிக்கு சென்றடையும். அங்கு ஒரு மணிநேரத்துக்குப்பின், பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்பட்டு, இரவு 10 மணிக்கு ஹவுரா வந்து சேரும்.
இந்நிலையில் வந்தேபாரத் ரயில் ஹவுராவில் இருந்து நியூ ஜல்பைகுரிக்கு இயக்கப்பட்ட 4 நாட்களுக்குள் குமார்கஞ்ச் ரயில்நிலையம் அருகே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது, சிலர் ரயில் மீது கல்வீசுயுள்ளனர். இதில் ரயிலின் ஒரு பெட்டியின் பக்கவாட்டுக் கண்ணாடிகள் சேதமடைந்தன.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ரயில்வே போலீஸின் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே முதல் கல்வீச்சு சம்பவம் நடந்த 2 நாட்களுக்குள் 2வதுமுறையாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு சம்பவம் நேற்று நடந்துள்ளது.
ஓட்டுனர்களே கவனிங்க! இந்திய சாலைகளின் ஆபத்தான நேரம், கவனமாக இருக்க வேண்டிய நேரம் எது தெரியுமா?
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “ ஹவுரா-ஜல்பைகுரி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கடந்த 2 நாட்களுக்குள் 2வது முறையாக மர்மநபர்கள் கல்வீசித் தாக்கியுள்ளனர். இரு பெட்டிகளின் தலா ஒரு கண்ணாடி ஜன்னல்கள் கல்வீச்சில் சேதமடைந்தன.
உடைந்த கண்ணாடிகளுடன் நியூஜல்பைகுரி ரயில்நிலையத்துக்கு வந்தேபாரத் ரயில் வந்து சேர்ந்தது.
இந்த இரு கல்வீச்சு சம்பவம் தொடர்பாகவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்