Rahul Gandhi: 'என் சகோதரர் ராகுல் காந்தி போர் வீரர்! பாஜக அரசுக்கு அஞ்சமாட்டார்': பிரியங்கா காந்தி பெருமிதம்

By Pothy Raj  |  First Published Jan 3, 2023, 4:51 PM IST

என் சகோதரர் ராகுல் காந்தி போர் வீரர். அவரின் நன்மதிப்பைக் கெடுக்க கோடிக்கணக்கில் பாஜக செலவிட்டாலும் அவர் அஞ்சமாட்டார் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார்


என் சகோதரர் ராகுல் காந்தி போர் வீரர். அவரின் நன்மதிப்பைக் கெடுக்க கோடிக்கணக்கில் பாஜக செலவிட்டாலும் அவர் அஞ்சமாட்டார் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செல்லும் பாரத் ஜோடோ யாத்திரையின் 2-ம் கட்டம் இன்று டெல்லியிலிருந்து உத்தரப்பிரதேசத்துக்குள் செல்கிறது. இதற்காக ராகுல் காந்தியை, உத்தரப்பிரதேசத்தின் லோனி எல்லையில் வரவேற்க பிரியங்கா காந்தி காத்திருந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: 

Tap to resize

Latest Videos

4 நாள்ல வேலைய காட்டிட்டிங்களே! ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு: கண்ணாடிகள் சேதம்

ஓட்டுனர்களே கவனிங்க! இந்திய சாலைகளின் ஆபத்தான நேரம், கவனமாக இருக்க வேண்டிய நேரம் எது தெரியுமா?

மிகப்பெரிய தொழிலதிபர்களான அம்பானி, அதானி போன்றோர் பல அரசியல்வாதிகளை, பொதுத்துறை நிறுவனங்களை, ஊடகங்களை விலைக்கு வாங்கலாம். ஆனால், அவர்களால் ஒருவரும் என் சகோதரரை விலைக்கு வாங்க முடியாது.

ராகுல் காந்தி கடும் குளிரையும் பொருட்படுத்தவில்லை என்று மக்கள் கூறுகிறார்கள். என் சகோதரருக்கு உண்மை எனும் கவசம் அவருக்குள் இருக்கிறது. கன்னியாகுமரியில் இருந்து 3ஆயிரம் கி.மீ நடந்துவரும் பாரத் ஜோடோ யாத்திரையை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன். 

என் மூத்த சகோதரரை நினைத்து அதிகபட்சமாகப் பெருமைப்படுகிறேன். ராகுல் காந்தியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க அரசு ஆயிரக்கணக்கான கோடிகளைச் செலவிட்டது, அழுத்தங்களைக் கொடுத்தது. ஆனால், என் சகோதரர் உண்மையின் பாதையில் இருந்து விலகவில்லை. விசாரணை அமைப்புகளை ஏவிவிட்டார்கள்,  ஆனால் அதற்கெல்லாம் ராகுல் காந்தி அஞ்சவில்லை.என் சகோதரர் ராகுல் காந்தி போர் வீரர். 

பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் வரும் 16, 17 தேதிகளில் கூடுகிறது

ராகுல் காந்தி அன்பு எனும் கடை திறந்துவெறுப்புச்சந்தையில் பரப்புகிறார், மக்களை ஒன்றுதிரட்ட நடக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒவ்வொருவரும் அன்பு எனும் கடை திறந்து  அதைப் பரப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்

click me!