BJP National Executive Meeting: பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் வரும் 16, 17 தேதிகளில் கூடுகிறது

By Pothy Raj  |  First Published Jan 3, 2023, 3:30 PM IST

பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது. கட்சியின் உட்சபட்ச அதிகாரம் பெற்ற குழு என்பதால் இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்.


பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது. கட்சியின் உட்சபட்ச அதிகாரம் பெற்ற குழு என்பதால் இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்.

பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் ஆண்டுக்கு இருமுறை நடக்கும். ஆண்டில் முதல் பாதியில் ஒருமுறையும், 2வது பாதியிலும் கூட்டம் நடக்கும். கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேசிய செயற்குழுக் கூட்டம் நடந்தது.

Tap to resize

Latest Videos

அதன்பின் ஜனவரி 16 மற்றும் 17ம் தேதிகளில் 2023ம் ஆண்டுக்கான முதல் தேசிய செயற்குழுக் கூட்டம் நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில் முக்கிய அம்சங்கள் ஆலோசிக்கப்படலாம் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைனிடம் ரஷ்யாவின் அணுகுமுறையும் இந்தியாவிடம் சீனாவின் மிரட்டலும் ஒன்றுதான்: ராகுல் காந்தி விளக்கம்

குறிப்பாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் இமாதத்தில் முடிகிறது. இதையடுத்து,அவரின் பதவிக்காலத்தை நீட்டித்து முடிவு எடுக்கப்படலாம் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இமாச்சலப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியை காங்கிரஸிடம் பறிகொடுத்தது. அந்தத் தோல்வி குறித்து தேசிய செயற்குழுவில் விவாதிக்கப்படலாம்.

2023ம் ஆண்டில் 5 மாநிலங்களில் நடக்கும் சட்டசபைத் தேர்தல் முக்கியமானதாகும். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த  5மாநிலத் தேர்தலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3,000கி.மீ நிறைவு!ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை உ.பி.க்குள் நுழைகிறது

இது தவிர வரும் மார்ச் மாதத்துக்குள் வடகிழக்கு மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தல்களுக்கு எவ்வாறு தயாராவது, யாரைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பது, 5 மாநிலங்களில் நடக்கும் தேர்தலில் எவ்வாறு செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்படலாம்.

இந்த 5 மாநிலங்களில் நடக்கும் தேர்தலில் கர்நாடகா, மத்தியப்பிரதேசத்தில் மட்டும்தான் பாஜக ஆட்சி நடக்கிறது, தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ், டிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இந்த மாநிலங்களில் எவ்வாறு ஆட்சியை கைப்பற்றுவது குறித்து பாஜக செயற்குழுவில் முக்கியமாக விவாதிக்கப்படும்.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இந்த மாநாட்டுக்காக பாஜக எவ்வாறு தயாராவது என்பது குறித்தும் பாஜக செயற்குழுவில் பேசப்படலாம் எனத் தெரிகிறது.

2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வெல்ல வேண்டும் என்ற தீவிரத்துடன் காய்களை நகர்த்தி வருகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா 11 மாநிலங்களில் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். மக்களவைத் தேர்தலை எவ்வாறு சந்திப்பது, எவ்வாறு தயாராவது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது

click me!