Rahul:உக்ரைனிடம் ரஷ்யாவின் அணுகுமுறையும் இந்தியாவிடம் சீனாவின் மிரட்டலும் ஒன்றுதான்: ராகுல் காந்தி விளக்கம்

By Pothy RajFirst Published Jan 3, 2023, 2:09 PM IST
Highlights

உக்ரைன் நாட்டிடம் ரஷ்யா காட்டும் அணுகுமுறையும்,இந்தியாவிடம் சீனாவின் மிரட்டலும் ஒன்றுதான் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டிடம் ரஷ்யா காட்டும் அணுகுமுறையும்,இந்தியாவிடம் சீனாவின் மிரட்டலும் ஒன்றுதான் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மைய்யம் கமல் ஹாசனுடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த வாரம் உரையாடினார். அந்த வீடியோ தொகுப்பை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்திலும், பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பலவீனமான பொருளாதாரத்துடன் இந்தியா சீனா மோதல் தொடர்பு கொண்டுள்ளது. எந்தவிதமான நோக்கமும் இல்லாத, குழப்பமான தேசம், வெறுப்பு, கோபத்துடன் இந்திய எல்லையில் சீன அமர்ந்துள்ளது.

ஹே ராம் முதல் மொழி திணிப்பு வரை.. கடைசியில் கமல் ஹாசனுக்கு ராகுல் கொடுத்த சர்ப்ரைஸ் - என்ன தெரியுமா?

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா காட்டும் அணுகுமுறையும், இந்தியாவிடம் சீனாவின் அணுகுமுறையும் ஒன்றுதான். உக்ரைனிடம் ரஷ்யா என்ன கூறுகிறார்கள் என்றால், மேற்கத்திய நாடுகளுடன் உக்ரைன் நெருக்கமான உறவு வைத்திருப்பதை விரும்பவில்லை. மேற்கத்திய நாடுகளுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தால், நாங்கள் உங்களுடைய எல்லையை மாற்றி அமைக்க வேண்டிதிருக்கும் என ரஷ்யா எச்சரிக்கிறது

இதே கொள்கையைத்தான் சீனாவும் இந்தியாவிடம் செலுத்துகிறது. சீனா நம்மிடம் என்ன சொல்கிறது, நீங்கள் செய்வதில் கவனமாக இருங்கள், இல்லாவிட்டால் உங்கள் எல்லையை மாற்ற வேண்டியதிருக்கும். லடாக்கிற்குள் நுழைவோம், அருணாச்சலப்பிரதேசத்துக்குள்வருவோம். இதுபோன்ற அணுகுமுறை தளத்தை சீனா இந்தியாவிடம் உருவாக்குவதை நான் பார்க்கிறேன்.

21ம் நூற்றாண்டில் பாதுகாப்பு என்பது ஒரு முழுமையான விஷயமாக மாறிவிட்டது. அதைப் பற்றிய உலகளாவிய பார்வையை ஒருவர் கொண்டிருக்க வேண்டும், ஆனால் மத்தியில் ஆளும் நம் அரசாங்கம் அதை முற்றிலும் தவறாகக் கணக்கிட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன்.

3,000கி.மீ நிறைவு!ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை உ.பி.க்குள் நுழைகிறது

மோதல்களின் வரையறை மாறிவிட்டது. எல்லையில் சண்டையிட்ட ஒருவர், தற்போது எல்லா இடங்களிலும் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 21ம் நூற்றாண்டில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நாட்டு மக்களுக்கு இடையே உள்ளார்ந்த ஒற்றுமை இருக்கிறது. நாட்டில் நல்லிணக்கம் இருக்க வேண்டும், மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடக்கூடாது, அமைதி இருக்க வேண்டும், தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும்.

ஒரு இந்தியராக, நான் போர் வெறி கொண்ட மனிதராக இருக்க விரும்பவில்லை, ஆனால் எல்லையில் உண்மையான பிரச்சினைகள் உள்ளன என்பதையும், உள்நாட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்கும் அந்த பிரச்சினைகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதையும் நம் நாடு அறிந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தியர்கள் இந்தியர்களுடன் சண்டையிடும்போது, பொருளாதாரம் வேலை செய்யாதபோது, வேலையின்மை இருக்கும்போது, நமது வெளி எதிரிகள் இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

16 மாதங்களில் இல்லாதது! டிசம்பரில் வேலையின்மை 8.30 சதவீதமாக அதிகரிப்பு: சிஎம்ஐஇ தகவல்

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அரசாங்கத்திடம் தொடர்ந்து இதைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.  குறைந்தபட்சம் எதிர்க்கட்சிகளையாவது புரிந்துகொண்டு பேசுங்கள் .

நாங்கள் உங்களுக்கு உதவலாம், உங்களுக்கு ஆலோசனை வழங்கலாம், யோசனைகள் தெரிவிக்கலாம். ஆனால் மத்தியில் ஆள்பவர்கள் கேட்க மறுக்கிறார்கள்.  எல்லாமும் எங்களுக்குத் தெரியும், எல்லாவற்றையும் நாங்கள் புரிந்து கொள்வோம் என்கிறார்கள்
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்
 

click me!