இந்திய சாலைகளில் பயணிக்க ஆபத்தான நேரம் என்ன என்பது குறித்து மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்திய சாலைகளில் பயணிக்க ஆபத்தான நேரம் என்ன என்பது குறித்து மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
2021ம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த சாலை விபத்துகள் என்ற தலைப்பில் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இரு சக்கர, நான் சக்கர, கனரக வாகன ஓட்டுநர்கள் கவனமாக வாகனத்தை இயக்கவேண்டிய நேரத்தையும், விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரத்தையும், ஆபத்தான நேரத்தையும் தெரிவித்துள்ளது
ஹே ராம் முதல் மொழி திணிப்பு வரை.. கடைசியில் கமல் ஹாசனுக்கு ராகுல் கொடுத்த சர்ப்ரைஸ் - என்ன தெரியுமா?
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
அந்த வகையில் மாலை 6 மணி முதல் இரவு 9மணிவரைதான் விழிப்புணர்வுடன் ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்க வேண்டும். இந்த 3 மணிநேரத்தில்தான் அதிகபட்ச சாலை விபத்துகள் நடக்கின்றன.
2021ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் 20.70 சதவீத விபத்துகள் இந்த நேரத்தில்தான் நடந்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் நடந்த விபத்துகளின் சராசரியில்கூட இந்த நேரத்தில்தான் அதிகமான விபத்துகள் நடந்துள்ளன
2வதாக பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணிவரையிலான நேரத்தில் 17.8 சதவீத சாலை விபத்துகள் நடந்துள்ளன. புள்ளிவிவரங்கள்படி, பிற்பகல் முதல் மாலை வரை ஆபத்தான சாலைப் பயணமாக இருப்பது தெரியவருகிறது. அதாவது பிற்பகல் 3 மணிமுதல் இரவு 9 மணிவரையிலான காலநேரம் சாலையில் பயணிக்க ஆபத்தான நேரமாகும். இரவு 12 மணி முதல் காலை 6 மணிவரையிலான காலத்தில் மிகக்குறைவான விபத்துகள் பதிவாகியுள்ளன.
SBI கிளார்க் முதனிலைத் தேர்வு முடிவு வெளியீடு!மெயின் அட்மிட் கார்டை டவுன்லோடு செய்யலாம்
2021ம் ஆண்டில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 விபத்துகள் நடந்துள்ளன, இதில் 20.70 சதவீதம் அதாவது 85,179 விபத்துகள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணிக்குள் நடந்துள்ளன. 17.80 சதவீத விபத்துகள் 73,467 விபத்துகள் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணிக்குள் நடந்துள்ளன.
2021ம் ஆண்டில் அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் விபத்துகள் நடந்துள்ளன. அதைத் தொடர்ந்து, டிசம்பர், நவம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அதிக விபத்துகள் நடந்துள்ளன. 2021 ஜனவரி மாதத்தில் மட்டும் 40,305 விபத்துகள் நடந்துள்ளன, அதில் 14,575 பேர் உயிரிழந்துள்ளனர்
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது