காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் 2வது கட்ட பயணம் டெல்லியிலிருந்து உத்தரப்பிரதேசத்துக்குள் இன்று பிற்பகல் நுழைகிறது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் 2வது கட்ட பயணம் டெல்லியிலிருந்து உத்தரப்பிரதேசத்துக்குள் இன்று பிற்பகல் நுழைகிறது.
ஏறக்குறைய 9 நாட்கள் இடைவெளி, ஓய்வுக்குப்பின் பாரத் ஜோடோ யாத்திரையின் 2வது கட்ட நடைபயணம் இன்று தொடங்கியது.
ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய பாரத் ஜோடோ நடைபயணம், தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களைக் கடந்த மாதம் 24ம் தேதி காலை டெல்லி நகருக்குள் வந்தது.
4 நாள்ல வேலைய காட்டிட்டிங்களே! ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு: கண்ணாடிகள் சேதம்
9நாட்கள் ஓய்வுக்குப்பின் மீண்டும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று டெல்லியில் தொடங்கி உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் வழியாக ஜம்மு காஷ்மீர் சென்று முடிகிறது
ராகுல் காந்தி இன்று காலை காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள அனுமன் கோயிலில் சாமி தரிசனம் செய்து தனது 2வது கட்ட யாத்திரையைத் தொடங்கினார். டெல்லியின் பரபரப்பான அவுட்டர் ரிங்ரோடு வழியாகச் செல்லும் ராகுல் காந்தி பயணம், பிற்பகலில் உத்தரப்பிரதேசத்துக்குள் நுழையும்.
ஹே ராம் முதல் மொழி திணிப்பு வரை.. கடைசியில் கமல் ஹாசனுக்கு ராகுல் கொடுத்த சர்ப்ரைஸ் - என்ன தெரியுமா?
எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக ராகுல் காந்தி செல்லும் பாதைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. உத்தரப்பிரதேசத்துக்குள் இருநாட்கள் நடக்கும் ராகுல் காந்தி, அங்கிருந்து ஹரியானாவுக்குள் பானிபட் நகருக்குள் வியாழக்கிழமை செல்வார்.
ராகுல் காந்தி இதுவரை 110 நாட்களாக நடந்து 3 ஆயிரம் கி.மீ தொலைவு நடந்துள்ளார். இந்தியாவின் வரலாற்றிலேயே ஒரு அரசியல் தலைவரின் மிக நீண்ட நடைபயணம் என்றுகாங்கிரஸ் கட்சி பெருமைக் கொள்கிறது.
தீர்ப்பை மாற்றிச் சொல்லாதீங்க!பணமதிப்பிழப்பு பற்றி காங்கிரஸ் கருத்து
ராகுல் காந்தி யாத்திரை வரும் 26ம் தேதி குடியரசுத் தினத்தன்று ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் முடிகிறது. அங்கு ராகுல் காந்தி, “ஹாத் சே ஹாத் ஜோடோ” என்ற பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
இந்த ஹாத் சே ஹாத் ஜோடோ எனும் பிரச்சாரத்தை நாடுமுழுவதும் கொண்டு செல்லும் பணியை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி செய்ய இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, பணவீக்கம், ஆகியவற்றால் சாமானியர்கள் வாழ்வில் ஏற்பட்ட பாதிப்புகளை எடுத்துக்கூறும் வகையில் பெண்களை மட்டும் மையமாக வைத்து பிரியங்கா காந்தி நடைபயணத்தை மார்ச் மாதம் தொடங்க இருப்பதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன