SBI Clerk 2022 Result: SBI கிளார்க் முதனிலைத் தேர்வு முடிவு வெளியீடு!மெயின் அட்மிட் கார்டை டவுன்லோடு செய்யலாம்

By Pothy Raj  |  First Published Jan 3, 2023, 11:28 AM IST

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா  நடத்திய கிளார்க் பணிக்கான முதனிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா  நடத்திய கிளார்க் பணிக்கான முதனிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

எஸ்பிஐ வங்கியின்அதிகாரபூர்வ இணையதளமான sbi.co.in or ibps.in என்ற முகவரியில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதியோர் இந்த இணையதளத்தில் சென்று தங்கள் பதிவு அல்லது தேர்வு எண்ணைக் குறிப்பிட்டு முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டு, மெயின் தேர்வுக்குத் தயாராகலாம். 

Tap to resize

Latest Videos

வாடிக்கையாளர் சேவே மற்றும் விற்பனை பிரிவுக்கான இளநிலை கிளர்க் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 12, 19, 20, 25 ஆகிய தேதிகளில் எஸ்பிஐ வங்கி தேர்வு பல்வேறு மாநிலங்களில் பல்வேறு மையங்களில் நடந்தது. நாடுமுழுவதும் 5,008 காலியிடங்களுக்கு இந்த தேர்வு எஸ்பிஐ சார்பில் நடத்தப்பட்டது. 

4 நாள்ல வேலைய காட்டிட்டிங்களே! ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு: கண்ணாடிகள் சேதம்

இந்த முதனிலைத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள், அடுத்ததாக மெயின் தேர்வுக்கும், உள்ளூர்மொழித்திறன் தேர்வுக்கும் தயாராக வேண்டும். 

தேர்வு முடிவுகளை எவ்வாறு தெரிந்து கொள்வது

1.    எஸ்பிஐ அதிகாரபூர்வ இணையதளமான sbi.co.in/web/careers என்ற தளத்துக்குச் செல்ல வேண்டும்

2.    டவுன்லோடு எஸ்பிஐ கிளார்க் ரிசல்ட்2022 என்ற லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்.

3.    அதில் தேர்வு எழுதியவரின் தேர்வு எண், உள்ளிட்டவற்றை பதிவு செய்து சப்மிட் செய்ய வேண்டும்

4.    அதன்பின் தேர்வு எழுதியவரின் தேர்வு முடிவுகள் திரையில் தெரியும்

5.    அந்த தேர்வு முடிவுகளை எதிர்காலத் தேர்வுக்காக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

இதற்கிடையே முதனிலைத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் மெயின் தேர்வுக்கு தயாராகும் வகையில் மெயின் தேர்வுக்கான அட்மிட் கார்டு நேற்று இரவு வெளியானது.

கேட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு - இப்போதே டவுன்லோட் செய்யலாம்!

எஸ்பிஐ கிளார்க் முதனிலை தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு 2023, ஜனவரி 15ம் தேதி மெயின் தேர்வு நடக்கிறது. 

முதனிலைத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் sbi.co.in  என்ற இணையதளத்தில் மெயின் தேர்வுக்கான அட்மிட்கார்டை பதிவிறக்கம் செய்யலாம். மெயின் தேர்வு எழுதச் செல்பவர்களுக்கு இந்த அட்மிட் கார்டும், அடையாள அட்டையும் அவசியமாகும். 

மெயின் அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி

1.    எஸ்பிஐ அதிகாரபூர்வ இணையதளமான SBI.CO.IN என்ற முகவரிக்குச் செல்ல வேண்டும்.

2.    மெயின் பேஜில், வேலைவாய்ப்புப் பகுதி அதாவது கேரீர்ஸ் பகுதிக்கு செல்ல வேண்டும்

3.    எஸ்பிஐ கிளார்க் மெயின் அட்மிட் கார்டு லிங்கை கிளிக் செய்ய வேண்டும்

4.    புதிய லாகின் பேஜ் திறக்கும்

5.    அதில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட வேண்டும்.

6.    விவரங்களைப் பதிவு செய்து, லாகின் செய்யவேண்டும்.

7.    மெயின் தேர்வுக்கான அட்மிட் கார்டு வரும் அதை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

click me!