பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு ரூபாய் நோட்டு புழக்கம் இருமடங்கு அதிகரிப்பு

Published : Jan 03, 2023, 10:50 AM ISTUpdated : Jan 03, 2023, 11:46 AM IST
பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு ரூபாய் நோட்டு புழக்கம் இருமடங்கு அதிகரிப்பு

சுருக்கம்

மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு நாட்டில் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் இருமடங்காக உயர்ந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு நவம்பரில் அப்போது புழக்கத்தில் இருந்த 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மதிப்பு நீக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதற்குப் பின், புதிதாக 2000 ரூபாய், 500 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகள்  அறிமுகம் செய்யப்பட்டன.

மதிப்பு நீக்கப்பட்ட 15.4 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளில் 15.3 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்பட்டன. அதாவது  99.3 சதவீதம் செல்லாத நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்குத் திரும்பின.

பணமதிப்பு நீக்கத்தின் விளைவாக நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பணமதிப்பு நீக்கத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், மத்திய அரசில் அந்த நடவடிக்கை செல்லும் என்று அறிவித்துள்ளது.

இச்சூழலில், இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பணமதிப்பு நீக்கத்துக்குப் பிந்தைய ஆறு ஆண்டுகள் பற்றிய பல்வேறு தரவுகள் உள்ளன.

அந்த அறிக்கையின்படி, பணமதிப்பு நீக்கம் மூலம் கடந்த ஆறு ஆண்டுகளில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் மதிப்பு கிட்டத்தட்ட இரு மடங்கு உயர்ந்துள்ளது. 2016 நவம்பர் 4ஆம் தேதி கணக்குப்படி, 17.74 லட்சம் கோடி ரூபாய் பணம் புழக்கத்தில் இருந்தது. டிசம்பர் 23, 2022 வரையான கணக்கின்படி, நாட்டில் ரூபாய் நோட்டு புழக்கத்தின் மதிப்பு 32.42 லட்சம் கோடியாக உள்ளது.

புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு மட்டுமின்றி அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது.  அதாவது, 90,266 ஆக இருந்த எண்ணிக்கை மார்ச் 31, 2022 நிலவரப்படி, 1,30,533 ஆகக்  கூடியுள்ளது.

Demonetisation:மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்: உச்ச நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!