பாகிஸ்தானில் சமையல் எரிவாயுவை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து எடுத்துச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
பாகிஸ்தான் நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் சமையல் ஏரிவாயு சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்வாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளால், அங்குள்ள மக்கள் பிரம்மாண்டமான பிளாஸ்டிக் பைகளில் எரிவாயுவை நிரப்பி வாங்கிச் செல்கிறார்கள்.
பிளாஸ்டிக் பைகளில் மூன்று அல்லது நான்கு கிலோ எரிவாயுவை நிரப்ப சுமார் ஒரு மணிநேரம் ஆகிறது என்றும் எரிவாயு நிரப்பிய பைகளை வால்வு பொருத்தி இறுக்கமாக மூடிக்கொடுக்கிறார்கள் என்றும் அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவிக்கிறது. இவ்வாறு, வாங்கிச் சென்ற எரிவாயுப் பைகளில் சிறிய குழாயைப் பொருத்தி பயன்படுத்துகின்றனர் எனவும் அந்நிறுவனம் அளிக்கும் செய்தியிலிருந்து தெரிகிறது.
4 நாள்ல வேலைய காட்டிட்டிங்களே! ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு: கண்ணாடிகள் சேதம்
அந்நாட்டுச் சிறுவர்கள் சமையல் எரிவாவு நிரம்பிய மிகப்பெரிய பிளாஸ்டிக் பைகளை வாங்கிச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் வீடியோவாக வலம் வருகிறது. அதில், "பாகிஸ்தானில் சமையல் எரிவாயுவை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்பனை செய்யும் வழக்கம் அதிகரித்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
In Pakistan, the practice of using gas packed in plastic bags instead of cylinders for cooking has increased. Gas is sold by filling bags inside the shops connected to the gas pipeline network. People use it in the kitchen with the help of a small electric suction pump. pic.twitter.com/e1DpNp20Ku
— R Singh...🤸🤸 (@lonewolf_singh)இந்தப் பதிவைப் பகிரும் பலரும், இப்படி எரிவாயுவை எடுத்துச் செல்லும்போது சிறு தவறு நடந்தாலும் பெரிய விபத்து நேரும் ஆபத்து உள்ளதாகக் கவலை தெரிவிக்கின்றனர். பாகிஸ்தான் அரசு குறித்த விமர்சனங்களையும் முன்வைக்கின்றனர்.
அவர்களை தூக்கில் போட வேண்டும்... ஆவேசமடைந்த அரவிந்த் கெஜ்ரிவால்!!