மணிப்பூர் இரும்புப் பெண்மணிக்கு கல்யாணம்…அதுவும் சென்னையில் ..பிரிட்டன் காதலரை மணக்கிறார்…

 
Published : May 09, 2017, 07:55 AM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
மணிப்பூர் இரும்புப் பெண்மணிக்கு கல்யாணம்…அதுவும் சென்னையில் ..பிரிட்டன் காதலரை மணக்கிறார்…

சுருக்கம்

Wedding for Irom sharmila

இரும்பு பெண்மணி  என்று அழைக்கப்படும் மணிப்பூரைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா, தனது நீண்ட நாள்  காதலரான இங்கிலாந்தை சேர்ந்த டெஸ்ட்மான்ட் கெடின்கோவை திருமணம் செய்ய முடிவு செய்து உள்ளார். இவர்களது திருமணம்  ஜுலை மாத இறுதியில் தமிழகத்தில் நடைபெறவுள்ளது.

மணிப்பூரில் செயல்படுத்தப்பட்டுள்ள  ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு எதிராக அம்மாநிலத்தில் 16 ஆண்டுகள்  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்தான் ஐரோம் ஷர்மிளா.

அண்மையில்  நடந்த மணிப்பூர் சட்டசபை தேர்தலில் ஐரோம் ஷர்மிளா தனிக்கட்சி தொடங்கி போட்டியிட்டார். ஆனால் தேர்தலில்  வெறும் 90 ஓட்டுகளே பெற்று ஐரோம் ஷர்மிளா தோல்வி அடைந்தார். இதையடத்து அம்மாநிலத்தில் இருந்து வெளியேறி தற்போது கேளைவில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் ஐரோம் ஷர்மிளா தனது நீண்ட நாள் காதலரான டெஸ்ட்மான்ட் கெடின்கோவை திருமணம் செய்ய முடிவு செய்து உள்ளார்.

2009ம் ஆண்டு ஐரோம் ஷர்மிளா பற்றி பர்னிங் பிரிட்ஜ்  என்ற புத்தகம் வெளியானது. இதை படித்த பிரிட்டனைச்  சேர்ந்த டெஸ்ட்மான்ட் அவரது போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் ஷர்மிளாவுக்கு கடிதம் எழுதி இருந்தார். இருவருக்கும் நல்ல நட்பு மலர்ந்தது.2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா வந்த டெஸ்ட்மான்ட் இம்பாலில் இரோம் ஷர்மிளாவை முதல் முறையாக சந்தித்தார். அவர்களது நட்பு காதலாக மாறியது. 

முதலில் இருவரும் இங்கிலாந்தில் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்தனர். ஐரோமுக்கு பாஸ்போர்ட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால் இந்த முடிவு கைவிடப்பட்டது. இந்நிலையில் இருவரும் சென்னையில்  திருமணம் செய்ய முடிவு எடுத்து உள்ளனர். வரும் ஜுலை மாத இறுதியில் நடைபெறும் என தெரிகிறது.

 

 

PREV
click me!

Recommended Stories

ஓட்டு போட்டா நிலம், தங்கம், தாய்லாந்து டூர்! புனே தேர்தலில் வேட்பாளர்களின் அதிரடி ஆஃபர்! வாக்காளர்கள் குஷி!
பெட்ரோல் - டீசல் போடப் போறீங்களா..? இந்தியா பம்புகளை நினைத்து அமெரிக்கா, சீனாவுக்கே கவலை