பதக்கங்களை கங்கையில் வீசி எறிவோம்: டெல்லியல் போராடும் மல்யுத்த வீரர்கள் வெளியிட்ட உருக்கமான கடிதம்

By SG Balan  |  First Published May 30, 2023, 1:18 PM IST

எங்கள் பதக்கங்களை இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசுவோம் என்று டெல்லியில் போராட்டம் நடத்திவரும் மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராடிவரும் இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர் வீராங்கனைகள் தங்கள் பதக்கங்களை உத்தரகாண்டில் உள்ள உத்தரகாண்டில் உள்ள புனித நகரமான ஹரித்வாரில் கங்கை நதியில் வீசி எறிவோம் எனக் கூறியுள்ளனர்.

"எங்கள் பதக்கங்களை இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசுவோம்" அவர்கள் கூறியிருக்கிறார்கள். அந்தப் பதக்கங்களை வைத்திருப்பதில் "அர்த்தம் இல்லை" என்றும் அவை மல்யுத்த கூட்டமைப்பின் பிரச்சாரத்திற்கான முகமூடியாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர். பதக்கங்களை இழந்த பிறகு, தங்கள் வாழ்க்கைக்கு அர்த்தமில்லை என்றாலும், தங்கள் சுயமரியாதையில் சமரசம் செய்துகொள்ள முடியாது என அவர்கள் கூறியுள்ளனர்.

Tap to resize

Latest Videos

மூளைச்சாவுக்குப் பின் உடலுறுப்பு தானம் மூலம் 3 நகரங்களில் 4 பேருக்கு மறுவாழ்வு அளித்த இளைஞர்!

பதக்கங்களை யாரிடம் திருப்பிக் கொடுப்பது என்று யோசித்ததாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. "ஒரு பெண்ணான குடியரசுத் தலைவர், 2 கிலோமீட்டர் தொலைவில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தார். எதுவும் பேசவில்லை" என்றும் அதனால் குடியரசுத் தலைவரிடம் திருப்பிக் கொடுக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

"எங்களை மகள்கள் என்று அழைக்கும் பிரதமரிடம் ஒப்படைக்கலாமா? ஆனால் அவர் இந்த மகள்களைப் பற்றி ஒருமுறைகூட அக்கறை காட்டவில்லை. மாறாக, புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் நம்மை அடக்கி ஆளும் தோரணையில் போட்டோகளுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்" என்று வேதனையுடன் கூறியுள்ளனர்.

9 ஆண்டுகள், 9 சாதனைகள்: பிரதமர் மோடி அரசு செயல்படுத்திய 9 சிறந்த திட்டங்கள்

"எங்களை சுரண்டுகிறார்கள், நாங்கள் போராட்டம் செய்தால் சிறையில் அடைக்கிறார்கள்" என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை போராட்டத்தில் முன்னணியில் இருக்கும் வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகட்  ஆகியோரும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் ட்வீட் செய்துள்ளனர்.

"...எங்கள் கழுத்தை அலங்கரித்த இந்த பதக்கங்களுக்கு இனி எந்த அர்த்தமும் இல்லை என்று தெரிகிறது. அதைத் திருப்பித் தருவதை நினைக்கும்போது என்னைக் கொல்வது போல இருக்கிறது. ஆனால் சுயமரியாதையை விட்டுக்கொடுத்துவிட்டு வாழ்ந்தால் என்ன பயன்" என்றும் மல்யுத்த வீரர் டவிட்டரில் பதிவிட்டுள்ள இந்தி கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Delhi Murder: நாட்டையை உலுக்கிய டெல்லியின் 10 கொடூர கொலை வழக்குகள்

பல பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்பியும், நாட்டின் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது குற்றம் சாட்டுகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திவந்த மல்யுத்த வீரர் வீராங்கனைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய நாடாளுமன்ற கட்டிடம் நோக்கிச் செல்ல முற்பட்டபோது, டெல்லி காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்.

டெல்லி காவல்துறையினர் மல்யுத்த வீரர் வீராங்கனைகளிடம் மோசமாக நடத்துகொள்ளும் வீடியோக்களும் படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. அதைத் தொடர்ந்து ஜந்தர் மந்தரில் அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்த டெல்லி காவல்துறை அனுமதி மறுத்தது.

50 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் காரை வாங்கி சர்ச்சையில் சிக்கிய கேரள கம்யூனிஸ்ட் தலைவர்

click me!