
நாங்கள் அடிக்கல் நாட்டிய திட்டங்களை நாங்களே தொடங்கி வைக்கும் கலாச்சாரத்தை கொண்டு வந்திருக்கிறோம். திட்டங்களுக்காக அலையவைக்கும் காலம் முடிந்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமித்தோடு தெரிவித்தார்.
அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகரில் ரூ.640 கோடியில், 680 ஏக்கர் பரப்பளவில் க்ரீன்பீல்ட் விமானநிலையம் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. இந்த விமானநிலையத்துக்கு கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில் 3 ஆண்டுகளில் மிக விரைவாகக்க ட்டப்பட்டுள்ளது.
இந்த விமானநிலையத்தின் அலுவலகங்கள் அனைத்திலும் புதுதப்பிக்கத்தக்க மின்சக்தியைக் கொண்டு இயங்குகின்றன. நவீன தொழில்நுட்பங்களைப்பயன்படுத்தி இந்த விமானநிலையக் கட்டடிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த விமானநிலையத்தின் டெர்மினல் ரூ.955 கோடியில் கட்டப்பட்டுள்ளது. உச்சகட்டமாக மணிக்கு 200 பயணிகளைக் கையாளமுடியும். அனைத்து காலநிலைகளிலும் விமானங்கள் தரையிறங்கும் விதத்தில் 2300 மீட்டர் நீளமுள்ள ஓடுபாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இட்டாநகரில் உள்ள க்ரீன்பீல்ட் விமானநிலையத்துக்கு பாரம்பரிய பெயரான டோனி போலோ விமானநிலையம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதாவது டோனி என்பது சூரியனையும், போலோ என்பது நிலவையும் குறிக்கும்.
இந்ந விமாநிலையத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று அருணாச்சலப்பிரதேசம் இட்டாநகருக்கு இன்று காலை வந்தார். அவரை முதல்வர் பீமா கண்டு, மத்திய அமைச்சர் கிரண்ரிஜிஜு,ஆளுநர் ,அமைச்சர்கள் வரவேற்றனர்.
இட்டாநகரில் நடந்த நிகழ்ச்சியில் டோனி போலா விமானநிலையத்தின் செயல்பாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அங்கு நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
சவார்க்கர் ஆங்கிலேயரிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்தது உண்மையே:மகாத்மாகாந்தி கொள்ளுப்பேரன் உறுதி
நாங்களே திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி, நாங்களே அந்தத் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் கலாச்சாரத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டிவிட்டு, அலையவிட்டு, காத்திருக்கவைக்கும் காலம் முடிந்துவிட்டது.
2019ம் ஆண்டு இந்த விமானநிலையத்துக்கு அடிக்கல் நாட்டினோம், தேர்தல் வந்தன முடிந்துவிட்டன. இந்த விமானநிலையம் நிச்சயமாக மோடி அரசால் கட்டிமுடிக்கப்படாது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவி்த்தார்கள், தேர்தலுக்காக மோடி அடிக்கல் நாட்டினார் என்று கூறினார்கள். ஆனால், இன்று நாங்கள் இந்தத் திட்டத்துக்கு அடிக்கல்நாட்டி, அதைத் தொடங்கி வைத்து விமர்சித்தவர்கள் முகத்தில் அறைந்துள்ளோம்.
இந்த மாநிலத்துக்கு வந்த அரசுகள் முன்னோக்கி கொண்டு செல்லவில்லை. உங்களுக்கு சேவை செய்ய நீங்கள் எனக்கு வாய்ப்பளித்தபோது மாற்றம் எனும் சகாப்தம் வந்தது.முந்தைய அரசுகள் வடகிழக்கு மாநிலங்கள் தொலைவில் உள்ளன என நினைத்தார்கள். எல்லையில் உள்ள கிராமங்கள் தேசத்தின் கடைசி கிராமமாக கருதப்பட்டன, ஆனால் எங்கள் அரசாங்கம் அந்த கிராமங்கள்தான் முதல் கிராமம் என்று கருதியது.
சுதந்திரத்திற்குப் பிறகு, வேறு சகாப்தத்திற்கு சாட்சியாக வடகிழக்கு மாறியது. பல தசாப்தங்களாக, இப்பகுதி புறக்கணிப்புக்கு பலியாகவே இருந்தது. அடல் பிஹாரி வாஜ்பாய் அரசு ஆட்சிக்கு வந்ததும், முதல் முறையாக வடகிழக்குப் பகுதிகளை மாற்ற முயற்சி எடுக்கப்பட்டன. வடகிழக்கு வளர்ச்சிக்கு தனி அமைச்சகம் அமைத்தது பாஜக அரசு
பிரதமர் மோடி நாளை அருணாச்சலப் பிரதேசம், உ.பி. பயணம்
அருணாச்சலப்பிரதேசத்தின் எல்லைஓர கிராமங்களிலும், உயரமான இடங்களிலும் சாலைகளை அமைத்துள்ளோம். உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக ரூ.50ஆயிரம் கோடியை அரசு செலவிட்டுள்ளது. மூங்கிலை வெட்டக்கூடாது எனும் பழைய கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம். மூங்கிலை வளருங்கள், வெட்டுங்கள், விற்பனை செய்யுங்கள்
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்