Modi:அருணாச்சலப் பிரதேசத்தின் முதல் கிரீன்பீல்ட் விமான நிலையம், நீர்மின்நிலையம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

By Pothy RajFirst Published Nov 19, 2022, 11:19 AM IST
Highlights

அருணாச்சலப் பிரதேசத்தின் முதல் கிரீன்பீல்ட் விமான நிலையத்தை இட்டாநகரில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். 

அருணாச்சலப் பிரதேசத்தின் முதல் கிரீன்பீல்ட் விமான நிலையத்தை இட்டாநகரில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். 

அருணாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இன்று ஒருநாள் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். 

அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகரில் ரூ.640 கோடியில், 680 ஏக்கர் பரப்பளவில் க்ரீன்பீல்ட் விமானநிலையம் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. இந்த விமானநிலையத்துக்கு கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில் 3 ஆண்டுகளில் மிக விரைவாகக்க ட்டப்பட்டுள்ளது.

இந்த விமானநிலையத்தின் அலுவலகங்கள் அனைத்திலும் புதுதப்பிக்கத்தக்க மின்சக்தியைக் கொண்டு இயங்குகின்றன. நவீன தொழில்நுட்பங்களைப்பயன்படுத்தி இந்த விமானநிலையக் கட்டடிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஊழல் விசாரணை!சிபிஐ பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் கெடு

இந்த விமானநிலையத்தின் டெர்மினல் ரூ.955 கோடியில் கட்டப்பட்டுள்ளது. உச்சகட்டமாக மணிக்கு 200 பயணிகளைக் கையாளமுடியும். அனைத்து காலநிலைகளிலும் விமானங்கள் தரையிறங்கும் விதத்தில் 2300 மீட்டர் நீளமுள்ள ஓடுபாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இட்டாநகரில் உள்ள க்ரீன்பீல்ட் விமானநிலையத்துக்கு பாரம்பரிய பெயரான டோனி போலோ விமானநிலையம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதாவது டோனி என்பது சூரியனையும், போலோ என்பது நிலவையும் குறிக்கும்.

இந்ந விமாநிலையத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று அருணாச்சலப்பிரதேசம் இட்டாநகருக்கு இன்று காலை வந்தார். அவரை முதல்வர் பீமா கண்டு, மத்திய அமைச்சர் கிரண்ரிஜிஜு,ஆளுநர் ,அமைச்சர்கள் வரவேற்றனர்.

பிரதமர் மோடி நாளை அருணாச்சலப் பிரதேசம், உ.பி. பயணம்

இட்டாநகரில் நடந்த நிகழ்ச்சியில் டோனி போலா விமானநிலையத்தின் செயல்பாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அருணாச்சலப்பிரதேச்தின் முதல் கிரீன்பீல்ட் விமானநிலையமாகும்.
அதுமட்டுமல்லாமல் இட்டநகர் அருகே அமைக்கப்பட்டுள்ள, 600மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய காமென் நீர்மின்சாரத் திட்டத்தையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
 

click me!