RBI Offcicals Scam: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஊழல் விசாரணை!சிபிஐ பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் கெடு

Published : Nov 18, 2022, 05:08 PM IST
RBI Offcicals Scam: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஊழல் விசாரணை!சிபிஐ பதில் அளிக்க  உச்ச நீதிமன்றம் கெடு

சுருக்கம்

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பல்வேறு வங்கிகளில் ஊழல்களில் ஈடுபட்டது குறித்து விசாரிக்கக் கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மனுவுக்கு சிபிஐ, மற்றும் ஆர்பிஐ 4 வாரங்களில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பல்வேறு வங்கிகளில் ஊழல்களில் ஈடுபட்டது குறித்து விசாரிக்கக் கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மனுவுக்கு சிபிஐ, மற்றும் ஆர்பிஐ 4 வாரங்களில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் “ ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஏராளமானோர் கிங்பிஷர் நிறுவனம், பேங்க் ஆப் மகாராஷ்டிரா, யெஸ் வங்கி உள்ளிட்ட  பல்வேறு வங்கிகளில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். 

பயங்கரவாதத்திற்கு உதவும் நாடுகளுக்கு கட்டணம் விதிக்க வேண்டும்: உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு!!

இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், இந்திய ஸ்டேட் வங்கிச் சட்டம் ஆகியவற்றை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீறியுள்ளனர். சட்டங்களை நேரடியாக மீறும் செயலில் உடந்தையாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். ஆதலால் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்

தீவிரவாதத்தைவிட ஆபத்தானது என்ன? எந்த மதத்துடனும் தீவிரவாதத்தை தொடர்புபடுத்தக்கூடாது: அமித் ஷா கருத்து

இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிஆர் காவே, விக்ரம் நாத் ஆகியோர் அமர்வு விசாரித்தது. இந்த மனு குறித்து சிபிஐ, ஆர்பிஐ அதிகாரிகள் பதில் அளிக்க கடந்த அக்டோபர் 17ம் தேதி  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில் இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிஆர் காவே, விக்ரம் நாத் ஆகியோர் அமர்வு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ரிசர்வ் வங்கி, சிபிஐ தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர்கள் விளக்கம் அளிக்க கூடுதல் அவகாசம் கேட்டனர். 

சவார்க்கர் ஆங்கிலேயரிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்தது உண்மையே:மகாத்மாகாந்தி கொள்ளுப்பேரன் உறுதி

இதைக் கேட்ட நீதிபதிகள் சிபிஐ, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பதில் மனு, விளக்கம் அளிக்க 4 வாரங்கள் கெடு விதித்தனர். இந்த வழக்கை அடுத்த 6 வாரங்களுக்குப்பின் விசாரிக்கப்படும் என ஒத்திவைத்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

என்.டி.ஏ. கூட்டணி எம்.பி.க்களுக்கு இரவு விருந்து கொடுக்கும் பிரதமர் மோடி!
காசி தமிழ் சங்கமம் 4.0: தமிழக விவசாயிகளுக்கு வாரணாசியில் பிரமாண்ட வரவேற்பு