kapil sibal: அரசு, போலீஸ், விசாரணை அமைப்புகளைக் கண்டு மக்கள் அச்சத்துடனே வாழ்கிறார்கள்: கபில் சிபல் கவலை

Published : Sep 24, 2022, 11:09 AM IST
kapil sibal: அரசு, போலீஸ், விசாரணை அமைப்புகளைக் கண்டு மக்கள் அச்சத்துடனே வாழ்கிறார்கள்: கபில் சிபல் கவலை

சுருக்கம்

அரசு, போலீஸார் மற்றும் விசாரணை அமைப்புகளைக் கண்டு மக்கள் அச்சத்துடனே வாழ்கிறார்கள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் வேதனை தெரிவித்துள்ளார்.  

அரசு, போலீஸார் மற்றும் விசாரணை அமைப்புகளைக் கண்டு மக்கள் அச்சத்துடனே வாழ்கிறார்கள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் வேதனை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று ரூபா பதிப்பகம் சார்பில் “ ரிப்லெக்சன்: இன் ரைம் அன்ட் ரிதம்” என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா நடந்தது.இதில் மாநிலங்களவை எம்.பி. கபில் சிபில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: 

மதத்தை இன்று ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். இது உலகம் முழுவதும் நடக்கிறது என்றாலும், இந்தியாவில் அதிகமாக நடக்கிறது என்பதற்கு இங்குதான் சிறந்த உதாரணம். லீசெஸ்டரில் நேற்றுநடந்த சம்பவம் என்பது முழுமையாக சகிப்புத்தன்மை இன்மையில் ஏற்பட்டது.

மொபைல் போனுக்கு வரும் மோசடி அழைப்புகள், போலி எஸ்எம்எஸ்களில் இருந்து விரைவில் விடுதலை

அங்கு என்ன நடந்துத என்பது அனைவருக்கும் தெரியும். அது அங்கிருந்து பல நாடுகளுக்கும்அந்த சம்பவத்தின் அலை ஏற்றுமதியாகும்.


இந்தியாவில் இன்று உண்மையான பிரச்சினை என்னவென்றால், வெறுப்புப் பேச்சில் யார் பங்களிக்கிறார்களோ அவர்கள் குறிப்பிட்ட சித்தாந்தத்தோடு கலந்துள்ளார்கள். போலீஸார் அவர்களை ஒன்றும் செய்ய விரும்பவில்லை.

வெறுப்புப் பேச்சில் ஈடுபடுவோர்கள் மீது வழக்கு ஏதும் தொடரப்படாததால், இயல்பாகவே துணிச்சல் ஏற்பட்டு அடுத்த பேச்சுக்கு தயாராகிவிடுகிறார்கள்.ஒட்டுமொத்த மக்களும் அச்சப்படுகிறார்கள், அவர்கள் மனதீரியாக புறக்கணிப்புக்கு ஆளாகிறார்கள்.

காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி ஸ்தம்பித்துவிட்டது: நாராயண மூர்த்தி வேதனை

அவர்கள் என்ன செய்தார்கள், எதற்காக பயப்படுகிறார்கள். நாங்கள் அச்சத்துடனே தொடர்ந்து வாழ்கிறோம். அமலாக்கப்பிரிவை நினைத்து பயப்படுகிறோம், சிபிஐ அமைப்பைப் பார்த்து பயப்படுகிறோம், அரசைப் பார்த்தும், போலீஸாரைப் பார்த்தும் பயப்படுகிறோம். ஒவ்வொருவரையும் பார்த்து பயப்படுகிறோம். எதன் மீதும், யார் மீதும்எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

ஏழைகள் பாதிக்கப்பட்டால் வழக்கறிஞர்களுக்கு வாதாட பணம் கொடுக்க முடியாமல் அவர்கள் நீதிமன்றத்தை நாடுவதில்லை. இன்று இரு கார்ப்பரேட் உலகங்களுக்கு இடையே தினசரி சண்டை நடக்கிறது. அமேசான் மற்றும் ரிலையன்ஸ்.

இதுக்கும் அதுக்கும்என ஏதாவது சண்டை நடக்கிறது. கேரளாவைச் சேர்ந்தவரோ, வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவரோ அல்லது மேற்கு வங்கம், தென் மாநிலத்தைச் சேர்ந்தவரோ எவ்வாறு உச்ச நீதிமன்றத்தை அணுக முடியும். நீதி பரிபாலனத்தின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறைகிறது.

ராகுல் காந்தி போட்டியில்லை! காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டி

என்னிடம் தினமும் உரையாடும் மக்கள் எனக்கு நியாயம் கிடைக்குமா என்று கேட்கிறார்கள். நான் அவர்களிடம் உறுதியாகக் கூற முடியாது எனத்தெரிவித்தேன். எந்த வழியிலும் உதவிசெய்ய இயலாது. ஏனென்றால் இந்த அமைப்பு முறை அவர்களுக்கு உதவி செய்யாது. 

இவ்வாறு கபில் சிபல் தெரிவித்தார்

PREV
click me!

Recommended Stories

இனி தேசிய நாணயங்களில் தான் வர்த்தகம்! டாலருக்கு சவால் விடும் புடின்!
இந்தியா-ரஷ்யா நட்பு ஒரு துருவ நட்சத்திரம்! புடினை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!