நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் நிலத்தடியில் இருந்து வந்த மர்ம சத்தம்.. பீதியில் உறைந்த மக்கள்

By Ramya s  |  First Published Aug 9, 2024, 3:43 PM IST

வயநாடு நிலச்சரிவு ஏற்படுத்திய சோகமே இன்னும் நீங்காத நிலையில் இன்று வயநாடு மாவட்டம், எடக்கல் பகுதியில் நிலத்தில் இருந்து மர்ம சத்தம் வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த 30-ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. வயநாட்டின் சூரல்மலை, மேப்பாடி முண்டகை உள்ளிட்ட பகுதிகள் இந்த நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் வீடுகள் இருந்த இடம் தெரியாமலே காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இந்த நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளது. 200 பேரின் நிலை என்னவென்றே தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

வயநாடு நிலச்சரிவு ஏற்படுத்திய சோகமே இன்னும் நீங்காத நிலையில் இன்று வயநாடு மாவட்டம், எடக்கல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் பூமிக்கு அடியில் இருந்து வந்த மர்ம சத்தம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது

Tap to resize

Latest Videos

undefined

இதை தொடர்ந்து கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (KSDMA) நில அதிர்வு பதிவுகளை ஆய்வு செய்து, மர்ம சத்தம் ஏற்பட என்ன காரணம் என்பதை ஆய்வு மேற்கொண்டது. முதல்கட்ட ஆய்வில் நிலநடுக்கத்தை குறிக்கும் எந்த நில அதிர்வு நடவடிக்கையும் இதுவரை கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. காலை 10.15 மணியளவில் நடந்த இந்த சம்பவம், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது,

“நாங்கள் காலை 10 மணி முதல் 10:15 மணி வரை பூமிக்கு அடியில் இருந்து பலத்த சத்தங்களை கேட்டோம். நில அதிர்வு ஏற்பட்டதையும் சிலர் உணர்ந்தனர். எனினும் இது சில நொடிகள் மட்டுமே நீடித்தது. எங்கள் பகுதியில் மட்டுமே சத்தம் கேட்கிறது என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் வயநாட்டில் பல இடங்களில் மக்கள் இந்த சத்தத்தை கேட்டதாக கூறியுள்ளனர்.” உள்ளூர்வாசி ஒருவர் கூறினார்.

வயநாடு மாவட்டத்தில் உள்ள நென்மேனி, அம்பலவயல், வைத்திரி போன்ற ஊராட்சிகளைச் சேர்ந்த மக்களும் இதுபோன்ற அனுபவங்கள் இருப்பதாக புகார் தெரிவித்தனர். அப்பகுதியில் உள்ள சில பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை வகுப்புகளை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்ட புவியியலாளர் ஷெல்ஜு, இதுகுறித்து பேசிய போது “ஆம், உள்ளூர் மக்களும் மாவட்ட நிர்வாகமும் விசித்திரமான நிகழ்வைப் பற்றி எங்களுக்குத் தெரிவித்தனர். நிலநடுக்கத்தை அடையாளம் காண மாவட்டத்தில் எங்களிடம் ஒரு பொறிமுறை இல்லை, ஆனால் நாங்கள் மக்களிடமிருந்து அறிக்கைகளை எடுத்துக்கொள்கிறோம், மேலும் என்ன காரணம் என்று நாங்கள் ஆராய்வோம்.

NCS அதிகாரி ஒருவர் கூறும்போது, ​​“வயநாட்டைச் சுற்றியுள்ள பகுதியில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை எந்த நில அதிர்வு நடவடிக்கையும் பதிவாகவில்லை." என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், மர்ம ஒலிகள் கேட்கும் மக்கள் அடர்த்தியான பகுதிகளில் இருந்து மக்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

click me!