138 கி.மீ வரை இழுத்து செல்லப்பட்ட உடல் பாகங்கள்! தோண்ட தோண்ட குவியும் சடலங்கள்! பலி எண்ணிக்கை 157ஆக உயர்வு!

Published : Jul 31, 2024, 07:52 AM ISTUpdated : Jul 31, 2024, 10:10 AM IST
138 கி.மீ வரை இழுத்து செல்லப்பட்ட உடல் பாகங்கள்! தோண்ட தோண்ட குவியும் சடலங்கள்! பலி எண்ணிக்கை 157ஆக உயர்வு!

சுருக்கம்

கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் கனமழை வெளுத்து வாங்கியது. இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

வயநாடு பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 157ஐ கடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் கனமழை வெளுத்து வாங்கியது. இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அதிகாலை 4 மணியளவில் மக்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது அடுத்தடுத்து கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டது.

இதையும் படிங்க: மூணாறிலும் நிலச்சரிவு - கொச்சி முதல் தேனி வரை போக்குவரத்தில் பெரிய பாதிப்பு!

இதில், சுமார் 200 வீடுகள் மண்ணில் புதைகண்ட நிலையில் 1000 பேர் வரை சிக்கியதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக தகவல் அறிந்ததும் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் இரவு பகல் பாராமல்  ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15்7ஆக அதிகரித்தது. 138 கி.மீ வரை இழுத்து செல்லப்பட்ட உடல்கள், உடல் பாகங்கள் நிலம்பூரில் மீட்கப்பட்டது. 

இதையும் படிங்க:  கடந்த 7 ஆண்டுகளில் அதிக முறை நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டது கேரளா: மத்திய அரசு தகவல்

நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட120-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 98 பேரை காணவில்லை  என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. கனமழை தொடர்ந்து வருவதால் சாலைகள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.  நிலச்சரிவில் சிக்கி காணாமல்போன சொந்தங்களை தேடி, மக்கள் அங்கு பரிதவித்து வரும் காட்சிகள் காண்போரை கலங்கடிக்கும் வண்ணம் உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

இந்தியா-ரஷ்யா நட்பு ஒரு துருவ நட்சத்திரம்! புடினை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!
மன்னிப்பு கோரிய இண்டிகோ நிறுவனம்.. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு சிறப்பு வசதிகள் அறிவிப்பு!