Land Slide: கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை; 245 பேர் பலி, 225 பேர் மாயம் - பீதியில் பொதுமக்கள்

Published : Jul 31, 2024, 07:52 PM IST
Land Slide: கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை; 245 பேர் பலி, 225 பேர் மாயம் - பீதியில் பொதுமக்கள்

சுருக்கம்

கேரளா மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 245ஐ கடந்துள்ள நிலையில், மேலும் 225 நபர்களை காணவில்லை என மாநில அரசு தெரிவித்துள்ளது.

கேரளா மாநிலத்தில் கடந்த இரு தினங்களாக பருவமழை ருத்ர தாண்டவம் ஆடிவருகிறது. தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு வரலாறு காணாத இழப்பை ஏற்படுத்தி வருகிறது. வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்கள் பெரிய சேதங்களை சந்தித்துள்ள நிலையில் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய கிராமங்கள் கடுமையான இழப்பிற்கு உள்ளாகி உள்ளன. தொடர்ந்து மீட்பு பணியில் ராணுவ வீரர்கள், விமானப்படை, மாநில பேரிடர் மீட்பு குழு, தேசிய மீட்பு குழு, தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கடுமையாக போராடி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பேரிழப்பில் இருந்து கேரளாவை மீட்கும் முயற்சியாக அண்டை மாநிலங்கள், தன்னார்வலர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகின்றனர். மேலும் மாநில முதல்வர் பினராயி விஜயனும் பொதுமக்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியில் பணம் செலுத்தி உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி உதவித் தொகையை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கேரளா முதல்வரை நேரில் சந்தித்து வழங்கினார்.

Wayanad landslides: வயநாடு நிலச்சரிவு; பொதுமக்களிடம் உதவி கோரும் கேரளா அரசு 

இதனிடையே நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்கள் தொடர்ந்து கொத்து கொத்தாக மீட்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 245ஐ கடந்துள்ளது. மேலும் 225 நபர்களை காணவில்லை என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. 

உதயநிதியின் தூண்டுதலால் என் மீது அடுக்கடுக்காக பொய் வழக்கு - சவுக்கு சங்கர் ஆவேசம்

இந்நிலையில், பாதிப்புகளை பார்வையிடுவதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாளை வயநாடு செல்கிறார். மேப்பாடியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமுக்கு செல்லும் அவர் செண்ட் ஜோசப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமுக்கும் செல்கின்றார். பின்னர் டாக்டர் மூபெண் மருத்துவக் கல்லூரிக்கு செல்கின்றார். ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தியும் வயநாட்டிற்கு செல்கின்றார். சாலை மார்க்கமாக இருவரும் வயநாடு சென்று நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகின்றனர்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!
AI என்றாலே இந்தியாதான்.. மைக்ரோசாப்ட் மிகப்பெரிய ஆசிய முதலீடு.. ரூ.1.5 லட்சம் கோடி!