Wayanad landslides: வயநாடு நிலச்சரிவு; பொதுமக்களிடம் உதவி கோரும் கேரளா அரசு

By Velmurugan s  |  First Published Jul 31, 2024, 6:43 PM IST

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக் 200ஐ கடந்துள்ள நிலையில், பொருளாதார இழப்பை ஈடு செய்ய பொதுமக்கள் உதவிக்கரம் நீட்டுமாறு அம்மாநில முதல்வர் கோரிக்கை.


கேரளா மாநிலத்தில் பருவமழை தனது கோர முகத்தை காட்டியுள்ளது. தொடர் கனமழையின் எதிரொலியாக அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டு பல்வேறு வீடுகள் இருந்த தடமே தெரியாத அளவிற்கு மண்ணில் புதையுண்டு காணப்படுகின்றன. வயநாடு மாவட்டத்தில் மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய கிராமங்களில் அதிகாலை 4 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள் கண் விழிக்கும் முன்பாகவே மண்ணில் புதையுண்டனர்.

வயநாடு நிலச்சரிவு: முதல்வர் நிவாணர நிதிக்கு ரூ.5 கோடி வழங்கும் கௌதம் அதானி!

Tap to resize

Latest Videos

நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர், விமானப்படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், தன்னார்வலர்கள் என பலரும் மூகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Wayanad Landslide | வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 9 தமிழர்கள் பலி!: 30 தமிழர்கள் மாயம்!

இதனிடைய மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ள கேரளா மாநில அரசுக்கு தன்னார்வலர்கள், திரை பிரபலங்கள், பிற மாநில அரசுகள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், பொதுமக்கள் நிதியுதவி அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “சோக காலங்களில், அனைவரும் கை கோர்ப்பது ஒற்றுமையின் தூய்மையான வடிவம், யாரும் துன்பங்களைத் தனியாக எதிர்கொள்ள மாட்டார்கள். ஒவ்வொரு பங்களிப்பும் முக்கியமானது, அதன் அளவு வித்தியாசப்பட்டாலும் நிச்சயம் முன்னேற்றம் ஏற்படும்” என்று குறிப்பிட்டு வங்கி விவரங்களை வெளியிட்டுள்ளார்.

அதன்படி 
கணக்கு எண் - 67319948232,
பெயர் - முதல்வரின் பேரிடர் நிவாரண நிதி (Chilef Minister's Distress Relief Fund)
வங்கி - பாரத ஸ்டேட் வங்கி,
கிளை - City Branch, Thiruvananthapuram
IFSC - SBIN0070028
என்ற வங்கி கணக்கில் நன்கொடையாளர்கள் தாங்கள் செலுத்த விரும்பும் பணத்தை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!