கேரளா, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 தமிழர்கள் உயிரிழந்ததாக அறியப்பட்டுள்ளது. மேலும் 30 தமிழர்கள் மாயமாகியிருப்பதும் தெரியவந்துள்ளது.
கேரள மாநிலத்தில் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய கிராமங்களில் அதிகாலை 4 மணியளவில் இந்த நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள், சுதாரித்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதையுண்ட நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். தகவல் அறிந்ததும் உடனடியாக களமிறங்கிய தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் மற்றும் சமூ ஆர்வலர்கள் பலரும் மீட்பு பணியில் இரவுபகலாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவரையில், நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 162ஆக உயர்ந்துள்ளது. இதில், 9 பேர் தமிழர்கள் என அறியப்பட்டுள்ளது. மேலும் 30 பேர் மாயகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
undefined
வயநாடு பகுதியில் இடைவிடாத மழையால் மொத்த நகரமும் வெள்ளத்தில் மிதக்கிறது. சாலைகள் முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளன. வயநாடு மாவட்டத்தில் நான்கு மணி நேரத்தில் மூன்று நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கு முன்பு, மாநிலத்தில் 24 மணி நேரத்தில் 372 மிமீ மழை பதிவாகியுள்ளது. வயநாடு நிலச்சரிவில் சிக்கி புதையுண்ட120-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 98 பேரை காணவில்லை என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: மூணாறிலும் நிலச்சரிவு - கொச்சி முதல் தேனி வரை போக்குவரத்தில் பெரிய பாதிப்பு!
இதையும் படிங்க: கடந்த 7 ஆண்டுகளில் அதிக முறை நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டது கேரளா: மத்திய அரசு தகவல்