“ சர்க்கஸ் பார்க்க வேண்டுமா...? அப்ப இதை பாருங்க” காங்கிரஸ் கட்சியை கலாய்த்த பாஜக

By Ramya s  |  First Published May 16, 2023, 6:36 PM IST

கர்நாடகாவில் அடுத்த முதல்வர் என்ற குழப்பம் தொடரும் நிலையில், அதனை சர்க்கஸுடன் ஒப்பிட்டு பாஜக கிண்டல் செய்துள்ளது.


கர்நாடகாவின் புதிய முதல்வர் குறித்த குழப்பம் தீவிரமடைந்த நிலையில், பாஜகவின் ஐடி விங் பொறுப்பாளர் அமித் மாளவியா, அதனை 'சர்க்கஸ்' உடன் ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சியை கேலி செய்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் "சர்க்கஸ் பார்க்க வேண்டுமா? கர்நாடகாவில் காங்கிரஸ் முதல்வரை தேர்ந்தெடுப்பதை பாருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : DK Shivakumar Net Worth : கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Tap to resize

Latest Videos

மேலும் “ பாஜக தனது முதல்வர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான விவாதங்களையும் ஆலோசனைகளையும் நடத்துகிறது, மேலும் முதல்வர்களுக்கு இடையில் கூட அதிகாரத்தை சுமூகமாக மாற்றுவதை உறுதிப்படுத்துகிறது. விரிவான ஆலோசனைகள் இருந்தபோதிலும், பாஜகவினர் ஒருவரையொருவர் வீழ்த்துவதையும், ஆதரவாளர்களைத் திரட்டுவதையும், ஊடகங்கள் மூலம் கட்சிக்கு மறைமுக அச்சுறுத்தல்களை வெளியிடுவதையும் நீங்கள் ஒருபோதும் காண முடியாது.

Want to watch circus? Watch the Congress select their CM in Karnataka.

The BJP also holds discussions and deliberations to elect its CMs and has often ensured smooth transition of power, even between CMs. Despite elaborate consultations, you will never find BJP aspirants falling…

— Amit Malviya (@amitmalviya)

 

மாறாக, காங்கிரஸ் கட்சியில், பத்திரிகையாளர்கள், கர்நாடக முதல்வராக சித்தராமையாவை நியமித்தனர். காங்கிரஸின் நிலைமைக்கு மன்னிக்கவும், தலைவர் கார்கே தன்னை ஒரு தபால்காரராகக் கருதுகிறார், ஒரு முடிவெடுப்பவராக அல்லது முடிவெடுக்கும் குழுவில் ஒருவராக இருக்கட்டும்…” என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அடுத்த கர்நாடக முதல்வரை முடிவு செய்வதற்கான கூட்டங்களை நடத்தி வரும் நிலையில் அமித் மாள்வியா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக முதலமைச்சர் பதவிக்கு மூத்த தலைவர்களான சித்தராமையா மற்றும் சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த சூழலில் கர்நாடகாவின் புதிய முதலமைச்சரின் பெயரை இன்று வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக சித்தராமையாவை நியமிக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவியை வழங்கி அவரை சமாதானப்படுத்தவும் காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் டி.கே. சிவக்குமார் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதுகுறித்து சோனியா, ராகுலுடன் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக்கு பிறகு கார்கே, கர்நாடக முதலமைச்சர் யார் என்ற அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : கர்நாடகாவில் அபாரமாக வெற்றி பெற்றும் நெருக்கடியில் தலைமை; திகைக்க வைக்கும் காரணங்கள்!!

click me!