தெரு நாய்கள் தாக்கியதில் வாஹ் பக்ரி தேயிலை குழுமத்தின் நிர்வாக இயக்குநர் தொழிலதிபர் பராக் தேசாய் உயிரிழந்துள்ளார்
வாஹ் பக்ரி தேயிலை குழுமத்தின் நிர்வாக இயக்குனரான பராக் தேசாய் காலாமானார். 49 வயதான அவருக்கு விதிஷா என்ற மனைவியும், பரிஷா என்ற மகளும் உள்ளனர். கடந்த 15ஆம் தேதி தன்னை தாக்க வந்த தெரு நாய்களிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது, அவரது வீட்டிற்கு வெளியே விழுந்து மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது.
கீழே விழிந்து கிடந்த அவரை கண்ட பாதுகாவலர், அவரது குடும்பத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினர் உடனடியாக வந்து அவரை மீட்டு அருகிலுள்ள ஷெல்பி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஒரு நாள் கண்காணிப்புக்குப் பிறகு, அறுவை சிகிச்சைக்காக Zydus மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு 7 நாட்களாக வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
undefined
அவரது இறுதிச் சடங்குகள் இன்று காலை 9 மணியளவில் தல்தேஜ் சுடுகாட்டில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரு நாய்களின் தாக்குதலும், அதனை கட்டுப்படுவதில் அரசுகள் காட்டும் அலட்சியப் போக்கும் தொடர் கதையாகி வருவதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், தெரு நாய்கள் தாக்கியதில் தொழிலதிபர் பராக் தேசாய் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கௌதமி பிரச்சினைக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: நாராயணன் திருப்பதி விளக்கம்!
தெருநாய்கள் பிரச்சினையை தான் தொடர்ந்து எழுப்பி வருவதாக சுட்டிக்காட்டியுள்ள சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம், இதனை அறிவியல் ரீதியாகவும் நெறிமுறை ரீதியாகவும் கையாள்வதற்கு உடனடியாக ஒரு தேசிய பணிக்குழு தேவை எனவும் வலியுறுத்தியுள்ளார்.
I have raised the issue of ad nauseam! We immediately need a national task force to deal with this scientifically & ethically https://t.co/Y27LhFqYnL
— Karti P Chidambaram (@KartiPC)
இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், அந்த கடிதத்தை பெற்றுக் கொண்டதாக ஒப்புகை சீட்டை அனுப்பியுள்ளனர். ஆனால், அதற்கு மேல் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் கார்த்தி சிதம்பரம் எம்பி தெரிவித்துள்ளார்.