தொடங்கியது வாக்கு எண்ணிக்கை… உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை

Asianet News Tamil  
Published : Mar 11, 2017, 08:30 AM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
தொடங்கியது வாக்கு எண்ணிக்கை… உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை

சுருக்கம்

vote counting started

உத்தரபிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள்  

எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகளிலும், மணிப்பூர் மாநிலத்தில் 60 தொகுதிகளிலும்,

கோவாவில் 40 தொகுதிகளிலும், உத்தரகாண்ட்டில் 70 தொகுதிகளிலும், பஞ்சாப் மாநிலத்தில்

117 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது,

இந்த 5 மாநிலங்களிலும் வாக்க எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகின்றன.

உத்தரபிரதேசத்தில் 78 மையங்களிலும், உத்தரகாண்டில் 15 மையங்களிலும், 

பஞ்சாப்பில் 54 மையங்களிலும், 

கோவாவில் 2 மையங்களிலும், மணிப்பூரில் 9 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 

மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

வாக்கு எண்ணும் மையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

இன்னும் சற்று நேரத்தில் முன்ணனி நிலவரமும், பிற்பகலுக்குள் அனைத்து முடிவுகளும் தெரியவரும்.

உத்தரபிரதேசத்தில் பாஜக முன்ணணியில் உள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளன.

PREV
click me!

Recommended Stories

TOUR: பூமியின் சொர்க்கத்திற்கு ஒரு விசிட்.! காஷ்மீர் பயணம் பற்றி சுற்றுலாப் பயணிகள் சொல்வது என்ன?
Unmarried Couples Oyo Rules: கல்யாணம் ஆகாத ஜோடிகள் ஓயோ ரூமில் தங்கலாமா? இந்திய சட்டம் என்ன சொல்கிறது?