தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் மாரடைப்பால் சாலையில் சுருண்டு விழுந்த இளைஞருக்கு போக்குவரத்து காவலர் ஒருவர் செய்த CPR (சிபிஆர்) முதலுதவி சிகிச்சையால் இளைஞர் உயிர்பிழைத்தார்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் மாரடைப்பால் சாலையில் சுருண்டு விழுந்த இளைஞருக்கு போக்குவரத்து காவலர் ஒருவர் செய்த CPR (சிபிஆர்) முதலுதவி சிகிச்சையால் இளைஞர் உயிர்பிழைத்தார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன
ஹைதராபாத்தில் எல்பி நகரைச் சேர்ந்த பாலாஜி என்பவர் ராஜேந்திராநகருக்கு பேருந்தில் கடந்த 5 நாட்களுக்கு முன் சென்றார். அப்போது, பேருந்தில் தொங்கிக்கொண்டு சென்ற பாலாஜிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சாலையில் விழுந்தார்.
undefined
இந்தக் காட்சயைப் பார்த்த சாலையில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் இருந்த போக்குவரத்து காவலர், ராஜசேகர், உடனடியாக எந்தவிதத் தாமதமும் இன்றி, CPR (சிபிஆர்) முதலுதவி சிகிச்சை செய்தார். பாதிக்கப்பட்ட பாலாஜியின் நின்றுபோன இதயத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரும் வகையில் அவரின் இதயம் இருக்கும் பகுதியை காவலர் ராஜசேகர் இரு கைகளாலும் அழுத்தினர்.
முகேஷ் அம்பானி, குடும்பத்தினருக்கு உச்சபட்ச Z-plus பாதுகாப்பு : உச்ச நீதிமன்றம் உத்தரவு
இதில் சிறிது நேரத்தில் பாலாஜி மூச்சுவிட்டு, இதயம் துடிக்கத் தொடங்கியது. இதையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பாலாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது
சைபராபாத் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட ஆணையர் அலுவலகத்தில் காவலர் ராஜசேகர் பணியாற்றி வருகிறார். மாரடைப்பால் சுருண்டு விழுந்த பாலாஜிக்கு CPR (சிபிஆர்) சிகிச்சை செய்து காப்பாற்றிய காவலர் ராஜசேகருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
சைபராபாத் போலீஸ் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ மாரடைப்பால் பாதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்ட இளைஞர் பாலாஜி, தற்போது உடல்நலம்தேறியுள்ளார். இந்த செய்தி மிகப்பெரிய ஆறுதல் அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளது
பாலாஜிக்கு CPR (சிபிஆர்) சிகிச்சை செய்து காப்பாற்றிய காவலர் ராஜசேகரை தெலங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் டி ஹரிஸ் ராவ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் பாராட்டியுள்ளனர்.
காவலர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் அனைவருக்கும் இந்த வாரத்தில் இருந்து CPR (சிபிஆர்) சிகிச்சை அளிக்கும் பயிற்சியை தெலங்கானா அரசு தொடங்கியுள்ளது.
Highly Appreciate traffic police Rajashekhar of Rajendranagar PS for doing a commendable job in saving precious life by immediately doing CPR. Govt will conduct CPR training to all frontline employees & workers next week inview of increasing reports of such incidents pic.twitter.com/BtPv8tt4ko
— Harish Rao Thanneeru (@BRSHarish)சிகிச்சையில் நலம் பெற்றுள்ள பாலாஜி கூறுகையில் “ ஆரம்கார்க்கில்இருந்து குர்னூலுக்கு பேருந்தில் செல்ல இருந்தேன். அப்போது திடீரென எனக்கு நெஞ்சில் வலி ஏற்பட்டு சாலையில் விழுந்துவிட்டேன். அதன்பின் ஒரு காவலர் என்னை நோக்கி ஓடிவந்ததை மட்டும் அறிந்தேன், அதன்பின் சுயநினைவு இல்லை, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தேன்.
ஆரம்கார்க் மருத்துவமனையில் இருந்து ஹயாத்நகர் மருத்துவமனைக்கு நான் மாற்றப்பட்டேன். இதுவரை எனக்கு ரூ.70ஆயிரம் வரை செலவாகிவிட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினேன்” எனத் தெரிவித்தார்