இணையத்தை தெரிக்கவிடும் காந்தக் கண்ணழகி... ஒரே நாளில் வாட்ஸ் ஆப்... ட்விட்டர் பேஸ்புக்கில் ஸ்டேட்டசாக மாறிய கனவுகன்னி...

 
Published : Feb 12, 2018, 05:09 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
இணையத்தை தெரிக்கவிடும் காந்தக் கண்ணழகி... ஒரே நாளில் வாட்ஸ் ஆப்... ட்விட்டர் பேஸ்புக்கில் ஸ்டேட்டசாக மாறிய கனவுகன்னி...

சுருக்கம்

Viral Video is All Over Your Social Media Timeline

இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஜிமிக்கு கம்மல் பாடலுக்கு ஆடிய நடனம் 2017-ம் ஆண்டில் யூடியூப்  டிரெண்டிங்கில் இரண்டாம் இடம் பிடித்தது.

சமூக வலைதளத்தில் வரவேற்பைப் பெற்ற பாடல் 'ஜிமிக்கி கம்மல்'. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான “Velipadinte Pusthakam” படத்தில் இடம்பெற்றிருந்தது. இதற்கு ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு கொச்சியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆடிய நடனம் கடந்த ஆகஸ்ட் மாதம் யூடியுப் தளத்தில் பதிவேற்றப்பட்டது முதல், அது இந்திய அளவில் பிரபலமானது.

தற்போதுவரை இந்த வீடியோவை 18 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இது போல் மற்றொரு வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகி உள்ளது. இன்று பிப்ரவரி 12, 'கட்டிப்பிடி தினம்'. காதலர் வாரத்திற்காக   மார்க்கெட்டிங் ஜிமிக்கு கம்மல் போல், ஒரு பாடல்  யுடியூப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

பிப்ரவரி 9 அன்று, 'காதலர் தினம்' இந்த காதலர் வாரம் அட்டவணை படி  ஒரு ஆதார் லவ் என்ற படத்திற்காக    எடுக்கபட்ட மாணிக்ய மலரேயா பூவி என்ற பாடல் யுடியூபில் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த பாடலுக்கும் ஷான் ரஹ்மான் இசை அமைத்து உள்ளார். நடிகர்-தயாரிப்பாளர்-இயக்குனர் வினீத் ஸ்ரீனிவாசன் பாடி உள்ளார் ஜிமிக்கி கம்மல் பாடலையும் இவரே பாடினார். இந்த பாடலை விட இந்த பாடலில் நடித்து உள்ள  பிரியா பிரகாஷ் வாரியரின் கண் அசைவே இப்போது இந்த வீடியோ வைரலாக காரணமாகும். மலையாளத்தில் வெளியான இந்த பாடல் மொழி பாகுபாடின்றி அனைத்து மொழிகளிலும் இளைஞர்களை தூங்கவிடம் செய்திருக்கிறார் இந்த காந்தக் கண்ணழகி பிரியா வாரியார். இன்று மட்டும் இளைஞர்களின் வாட்ஸ் ஆப், டிவிட்டரில் ஸ்டேட்டஸ் போட்டு இணையத்தை தெறிக்க விடுகின்றனர்.

இன்று மட்டுமே கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில் லிஸ்டில் முதலிடத்தில் உள்ளார் பிரியா. அதேபோல இந்திய அளவில் டிவிட்டரில் முதலிடத்தில் உள்ளார். இது இன்னும் சில நாட்கள் வரை தொடர்ந்தாலும் ஆச்சர்யபடுவதற்க்கில்லை.

இந்த படத்தில் பிரியா சிறிய  வேடத்தில் தான் நடித்துள்ளார். பிரியாவின் திறமையை கண்டு அவருக்கு இந்த படத்தில்  காட்சிகளை அதிகபடுத்தி உள்ளார் இயக்குனர். 18 வயதே ஆகும் பிரியா தற்போது தென்னிந்தியாவையே தனது கண்ணசைவில் தெரிக்கவிடுகிறார்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!