கால் பட்டதாக கூறி கல்லூரி மாணவன் மீது தாக்குதல்! கோமா நிலைக்கு சென்ற மாணவன் உயிரிழப்பு!

 
Published : Feb 12, 2018, 04:33 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
கால் பட்டதாக கூறி கல்லூரி மாணவன் மீது தாக்குதல்! கோமா நிலைக்கு சென்ற மாணவன் உயிரிழப்பு!

சுருக்கம்

College student attacked! Student death in coma!

தவறுதலாக கால் பட்டதாகக் கூறி சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத் நகரில் நேற்றிரவு ஓட்டல் ஒன்றின் வெளியே சட்ட கல்லூரி மாணவன் திலீப் சரோஜ் எப்வர் தன்னை மிதித்து விட்டதாக ஒருவர் குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

அவர்களுக்கிடையேயான வாக்குவாதம் ஒரு கட்டத்துக்குப் பிறகு, திலீப்பை அடிக்க தொடங்கியுள்ளனர். இரும்பு ராடு, ஹாக்கி மட்டை, செங்கல் உள்ளிட்டவற்றால் திலீப் தாக்கப்பட்டுள்ளார்.

திலீப் தாக்கப்படுவதைப் பார்த்த சிலர், செல்போனில் படம் பிடித்து அதனை வெளியிட்டுள்ளனர். திலீப்பை தாக்கியவர்கள் மது அருந்தியதாக கூறப்படுகிறது. 

தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த திலீப், மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை சோதித்த டாக்டர்கள், திலீப் கோமா நிலையில் உள்ளதாக தெரிவித்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திலீப் உயிரிழந்தார்.

திலீப்பை தாக்கியவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டல் பணியாளர் ஒருவரை போலீசார் கைது. செய்துள்ளனர். மேலும் மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!