தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்த இளைஞர்.. தற்போதைய நிலை என்ன தெரியுமா?

Published : Apr 18, 2022, 01:06 PM ISTUpdated : Apr 18, 2022, 01:08 PM IST
தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்த இளைஞர்.. தற்போதைய நிலை என்ன தெரியுமா?

சுருக்கம்

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் சைதன்யா (21). இவர் விஜயவாடாவில் உள்ள லயோலா கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு அருகே உள்ள கூல்ட்ரிங்ஸ் கடைக்கு சென்ற சைதன்யா கடை உரிமையாளரிடம் குடிநீர்பாட்டில் கேட்டுள்ளார். 

விளையாடிய களைப்பில் இருந்த இளைஞர் சைதன்யா(21) தண்ணீருக்கு பதிலாக தவறுதலாக ஆசிட் குடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆசிட் குடித்த இளைஞர்

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் சைதன்யா (21). இவர் விஜயவாடாவில் உள்ள லயோலா கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு அருகே உள்ள கூல்ட்ரிங்ஸ் கடைக்கு சென்ற சைதன்யா கடை உரிமையாளரிடம் குடிநீர்பாட்டில் கேட்டுள்ளார். அவர் பிரிட்ஜில் உள்ள குடிநீர் பாட்டிலை எடுத்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். சைதன்யா பிரிட்ஜில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்தார்.

மருத்துவமனையில்  அனுமதி

அப்போது தண்ணீர் பாட்டிலுக்கு பதிலாக ஆசிட் ஊற்றி வைத்து இருந்ததை எடுத்து குடித்தது தெரியவந்தது. இதனால் சைதன்யாவின் வாய் மற்றும் குடல் முழுவதும் வெந்தது. சைதன்யா வலியால் அலறி துடித்தார். அங்கிருந்தவர்கள் சைதன்யாவை மீட்டு விஜயவாடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கூல்ட்ரிங்ஸ் கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, அவர் தண்ணீர் பாட்டில் அருகில் ஆசிட் ஊற்றி வைத்திருந்தது தெரியாமல் சைதன்யா குடித்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;- எவ்வளவு கெஞ்சியும் விடாத மாமியார்.. மருமகனை கதற விட்ட தரமான சம்பவம்.. அதிர்ச்சியில் மகள்..!

PREV
click me!

Recommended Stories

பீகாரில் திருப்பதி கோயில்! 1 ரூபாய்க்கு 10.11 ஏக்கர் நிலம் வழங்கிய நிதிஷ் குமார்!
சாவு எப்படியெல்லாம் வரும் பார்த்தீங்களா! நியூயார்கில் இந்திய மாணவி உயிரி**ழப்பு! நடந்தது என்ன?