#BREAKING: லக்கிம்பூர் வன்முறை.. மத்திய அமைச்சர் மகனின் ஜாமின் ரத்து.. ஒரு வாரத்துக்குள் சரணடைய உத்தரவு.!

By vinoth kumarFirst Published Apr 18, 2022, 11:10 AM IST
Highlights

உத்தரபிரதேசத்தில் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் கைதான மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட  ஜாமினை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

உத்தரபிரதேசத்தில் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் கைதான மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட  ஜாமினை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.  

லக்கிம்பூர் வன்முறை

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் என்ற பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக காரில் சென்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா விவசாயிகள் மீது மோதினார். இதில், 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். 

வழக்குப்பதிவு

இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக  இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். மேலும், லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கீழமை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் தாக்கல் செய்துள்ளனர்.

ஜாமின் ரத்து

இதனிடையே, இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதன் மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.  இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட  ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒரு வாரத்துக்குள் சரணடையவும் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு உத்தரவு பிறக்கபிக்கப்பட்டுள்ளது. 

click me!